சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக திட்டம் வகுத்த இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு வீர தீர விருது !!
1 min read

சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக திட்டம் வகுத்த இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு வீர தீர விருது !!

நாட்டின் 78 ஆவது சுதந்திர தினம் சமீபத்தில் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக சில மாதங்கள் முன்னர் இந்திய கடற்படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை திட்டமிட்ட மற்றும் அதில் பங்குபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வீர தீர விருதுகளை இந்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது.

கேப்டன் ஷரத் சின்சுன்வால் மற்றும் லெஃப்டிநெண்ட் கமாண்டர் கபில் யாதவ் ஆகிய இரண்டு அதிகாரிகளுக்கும் ஏடன் வளைகுடா பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்திய கடற்படை நடவடிக்கைக்கு திட்டம் வகுத்ததற்காக சௌரிய சக்கரா வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பல்வேறு படைகளை சேர்ந்த 18 பேருக்கு சௌரிய சக்கரா வீரதீர விருது வழங்கப்பட்ட நிலையில் அவர்களின் இந்த இரண்டு கடற்கரை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

கேப்டன். ஷரத் சின்சுன்வால் இந்திய கடற்படையின் அதிநவீன நாசகாரி போர்க்கப்பலான கொல்கத்தா ரக போர்க்கப்பல்களில் முதல் கப்பலான ஐஎன்எஸ். கொல்கத்தா INS KOLKATA போர்க்கப்பலின் தலைமை அல்லது கட்டளை அதிகாரி ஆவார். இவரது கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் ஏடன் வளைகுடா பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது இந்த நடவடிக்கைக்கு Operation piracy in the gulf of Aden என்ன பெயரிடப்பட்டிருந்தது இவரது கப்பல் பல்வேறு வணிக கப்பல்களில் பணியாற்றிய 67 மாலுமிகளை காப்பாற்றியுள்ளது.

இது தவிர மேலும் கூடுதலாக ஆறு இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு அவர்களின் திட்டங்களை முறியடித்ததற்காக வீர தீர விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் மட்டுமின்றி ஏமன் நாட்டில் இருந்து வணிக கப்பல்கள் மீது ஹூத்தி பயங்கரவாதிகள் நடத்தி வந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா தற்கொலை தாக்குதல்கள் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளது.

அந்த வகையில் ஐஎன்எஸ் கொல்கத்தா ஏடன் வளைகுடா பகுதியில் இயங்கி வந்த சமயத்தில் மொத்தம் 27 முறை வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 13 கப்பல்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது மட்டுமின்றி ஒரு சில மாலுமர்களின் உயிர் இழப்பும் ஏற்பட்டது. இதிலும் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் ஒரு சில தாக்குதல்கள் ஐ என் எஸ் கொல்கத்தா கப்பல் இருந்த இடத்திலிருந்து ஒரு சில மைல் தொலைவில் நடைபெற்றுள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஐலண்டர் என்கிற வணிக கப்பல் மீது இரண்டு கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகள் மோதி வெடித்தன கடுமையான சேதம் அடைந்த அந்த கப்பலின் குழுவினர் உடனடியாக அவசர உதவி கோரி தகவல்கள் அனுப்பினர். மிக அருகாமையில் இந்த தாக்குதல் நடைபெற்றதால் அடுத்த தாக்குதல் ஒருவேளை ஐ எம் எஸ் கொல்கத்தா மீது கூட நடைபெறும் அபாயம் இருந்த நிலையிலும் கேப்டன் சரத் உடனடியாக கப்பலை ஐலாண்டற்கு கப்பலின் உதவிக்காக அதை நோக்கி செலுத்தினார். அதன் பிறகு ஐலண்டர் கப்பலுக்கு ஒரு வெடிபொருள் செயலிழப்பு குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்பி அனைத்தையும் சோதித்து கப்பல் பயணிப்பதற்கு எதுவாக உள்ளது என்பதை உறுதி செய்த பிறகு ஐஎம்எஸ் கொல்கத்தா வேறு பணிக்கு புறப்பட்டது.

இத்தகைய கடுமையான ஆபத்தான சூழல்களுக்கு மத்தியிலும் ஐ என் எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் மிகவும் திறம்பட செயல்பட்டது. மீண்டும் மீண்டும் ஆபத்தில் சிக்கிய தாக்கப்பட்ட வணிக கப்பல்களுக்கு உதவி அளித்தது மேலும் இந்தப் பதட்டமான சூழலை பயன்படுத்தி கப்பல்களை கைப்பற்றும் என்ற சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராகவும் திறம்பட செயல்பட்டது அப்படி தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் இருந்த 67க்கும் வரப்பட்ட ஆளுமைகளுக்கு உதவி செய்து சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட கப்பல்களை விடுவித்து அப்படி 17 மாலுமிகளையும் காப்பாற்றியுள்ளது.

அதேபோல கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி MSC Sky 2 என்கிற வணிக கப்பல் மீது ஏமனின் ஹூத்திக்கள் ஏவிய இரண்டு கப்பல் எதிர்ப்பு பலஸ்டிக் ஏவுகணைகள் மோதி வெடித்து தீப்பிடித்து இருந்தது. இதைத்தொடர்ந்து கப்பலின் 13 குழுவினரும் அவசர உதவி கோரி தகவல் அனுப்பிய நிலையில் ஐ என் எஸ் கொல்கத்தா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டு கப்பலில் பட்டியிருந்த தீயை மூன்றரை மணி நேரத்தில் அனைத்து கப்பலை பாதுகாப்பாக அனுப்பி வைத்தது.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அதாவது மார்ச் 6ஆம் தேதி True Confidence என்கிற வணிக கப்பல் மீது ஏமன் நாட்டின் ஹூத்தி பயங்கரவாதிகள் ஏவிய இரண்டு கப்பல் எதற்கு பலஸ்டிக் ஏவுகனைகள் மோதி வெடித்ததில் கப்பல் கடுமையான சேதத்தை அடைந்தது. உடனடியாக கப்பலில் இருந்த குழுவினர் பாதுகாப்பு படகு மூலம் கடலில் தப்பினர். அவர்கள் கடலில் இறங்குவதற்கு முன்னர் அனுப்பிய தகவலை வைத்து அவர்களின் இருப்பிடத்திற்கு சென்ற ஐ என் எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் அவர்களை மீட்டது தொடர்ந்து அவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஏவுகணை தாக்குதலில் மூன்று மாலுமிகள் உயிரிழந்ததும் மேலும் மூன்று பேருக்கு கால் துண்டானது முகத்தில் கடுமையான தீக்காயம் மற்றும் குடல்களில் இரும்பு தகடுகள் உள் நுழைந்து குத்தி கிழித்திருந்தது போன்ற படுகாயம் ஏற்பட்டது தெரிய வந்தது. எனினும் அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சை அளித்து பத்திரமாக கரை சேர்த்தது.

கடைசி சம்பவம் கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 15 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட நாட்களில் நடைபெற்று உலகத்தின் கவனத்தையே ஈர்த்த நிகழ்வாகும். MV Ruen என்கிற வணிக கப்பலை 35 சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றி வைத்திருந்தனர். இந்த நிலையில் ஐ எம் எஸ் கொல்கத்தா கப்பல் அந்தக் கப்பலை பின் தொடர்ந்து சென்று இந்திய கடற்படையின் மார்க்கோஸ் சிறப்பு படை வீரர்களை களமிறக்கி கோமாளி கடற்கொள்ளையர்களை சரணடைய வைத்தது வேலு கப்பலில் பழைய கைதிகளாக சிக்கி இருந்த 17 குழுவினரையும் பாதுகாப்பாக மீட்டது.

இந்த நான்கு சம்பவங்களும் ஐ என் எஸ் கொல்கத்தா கப்பல் ஏழுமலைகுடாவில் மேற்கொண்ட மிக முக்கியமான ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்த இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பை உயர்த்திய நிகழ்வுகளாகும். குறிப்பாக பிலிப்பைன்ஸ் அதிபர் பாங்போங் மார்க்கோஸ் MV TRUE CONFIDENCE கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாமிகளுக்கு உதவியதற்காகவும் அதேபோல MV RUEN அனிதா கப்பலில் கடற்கொள்ளையர்களால் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நிகரிய நாட்டை சேர்ந்த குழுவினரை மீட்டதற்காக பல்கேரியா நாட்டு அதிபர் ரூமன் ராடெவ் மற்றும் அண்ணா டு வெளியுறவு அமைச்சர் மரியா கேப்ரியேல் ஆகியோர் இந்தியாவுக்கு கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.