ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்ட லெபனான் மீது படையெடுக்கும் இஸ்ரேல் ?? கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான் !!
கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மீது லெபனானின் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லா தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கம் நடத்திய தாக்குதலில் 12 இஸ்ரேலிய டிரஸ் சமூக பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலியா உழவு அமைப்பாளர் மசாஜ் அளித்த தகவலின் படி 11 தலைநகர் பைரூட்டின் புறநகர் பகுதியில் இஸ்ரேலில் விமானப்படை நடத்திய துல்லிய குண்டு வீச்சு தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் மூத்த ராணுவ தளபதியான ஃபுவாத் ஷூக்கர் கொல்லப்பட்டான் இதைத்தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கமும் அதற்கு ஆதரவு அளிக்கும் ஈரானும் கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என அறிவிக்கையும் வெளியிட்டுள்ளன.
நாளுக்கு நாள் ஹிஸ்புல்லாவின் அட்டூழியம் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலியா ராணுவம் தனது படைகளையும் தளவாடங்களையும் லெபனானை ஒட்டி உள்ள எல்லைகளில் குவித்து வருகிறது. ஆகவே மிக விரைவாக இஸ்ரேல் லெபனார் மீது படையெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. ஏற்கனவே காசாவில் நடக்கும் போரில் காசா பகுதி துவம்சம் செய்து வரும் இஸ்ரேல் லெபனானுக்கும் அந்த நிலையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இது நடைபெற்றால் ஈரானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் காரணம் ஏற்கனவே காசாவில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் லெபனானிலும் அதன் ஆதரவு பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லா அந்த நிலையை சந்தித்தால் ஈரானுக்கு அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.
இதைத்தொடர்ந்து ஈரானும் முன்கூட்டியே இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் படை எடுத்தால் அது மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவுக்கு ஒரு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என ஈரான் அரசு தனது எச்சரிக்கையை அதிகாரப்பூர்வ அரசு அறிவிக்கையின் மூலமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.