இந்தியாவின் தேஜாஸ் போர் விமானங்களை நிராகரிக்கும் பிலிப்பைன்ஸ் ??
சுமார் 1.04 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8632 கோடி ரூபாய் மதிப்பிலான பிலிப்பைன்ஸ் விமானப்படைக்கான பல திறன் போர் விமானங்கள் வாங்கும் திட்டத்தில் இந்தியாவும் தனது இலகுரக தேஜாஸ் போர் விமானத்துடன் பங்கேற்றுள்ளது. தற்போது பிலிப்பைன்ஸ் விமானப்படை இந்தியாவின் இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை நிராகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது இந்த ஒப்பந்திற்கான போட்டியில் பங்கு பெற்றுள்ள அமெரிக்காவின் LOCKHEED MARTIN லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் F-16 V Viper போர் விமானம் மற்றும் ஸ்வீடன் நாட்டின் SAAB AB நிறுவனம் தயாரிக்கும் JAS 39 GRIPEN E ஆகிய போர் விமானங்களுக்கு ஆதரவான சூழல் இந்த பலதரண் போதுமான ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆகவே அவற்றிற்கு ஆதரவாக இந்திய போர் விமானத்தை நிராகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் விமானப்படையின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான 12 பல திறன் போர் விமானங்களை வாங்குவது அந்நாட்டின் ராணுவ நவீன மயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும். ஆகவே இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட போர் விமானங்களை தான் பிலிப்பைன்ஸ் விமானப்படை தேர்வு செய்யும் எனவும் இதை தொடர்ந்து தற்போது இந்தியாவின் LCA Light Combat Aircraft Tejad தேஜாஸ் இலகுரக சண்டை விமானம் போட்டியில் பின்தள்ளப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கும் இந்தியாவின் பிரதான மற்றும் முன்னணி வானூர்தி தயாரிப்பு நிறுவனமான அரசுக்கு சொந்தமான பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் HAL – Hindustan Aeronautics Limited இந்த ஒப்பந்தத்திற்கு அடுத்த தலைமுறை பிரம்மாஸ் BRAHMOS NG ஏவுகணைகளை சுமந்து சென்று போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தேஜாஸ் விமானங்களை ஆஃபர் செய்திருந்தது ஆனால் இதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு முற்றிலும் எதிர்பாராதது தற்போது இதை பற்றி HAL நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.