அமெரிக்காவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற செய்தி ஊடகமான CNN வெளியிட்டுள்ள செய்திகள் அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகனில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி ஈரானும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களும் இஸ்ரேல் மீது அடுத்த 72 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தும் அபாயம் எழுந்து இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் பாலஸ்தீன இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹானியே, லெபனானில் இருந்து இயங்கி வரும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லாவின் மூத்த ராணுவ தளபதி ஃபுவாத் ஷூக்கர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுள்ள நிலையில் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு முழுவதும் கடுமையான போர் பதற்றமும் கவலையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதற்கு ஹமாஸ் ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நிச்சயம் இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளதும் காரணமாகும்.
இதற்கிடையே சிரியாவில் இருந்து கொண்டு இஸ்ரேல் மீதான தாக்குதல்களை திட்டமிட்ட மூத்த ஈரானிய ராணுவ தளபதி ஒருவர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அவரை கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தவிர லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தை ஒழிப்பதற்காக இஸ்ரேல் படை எடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதேபோல கடந்த சில வாரங்கள் முன்பு ஈரான் ஆதரவு பெற்ற ஏமனில் இருந்து இயங்கி வரும் ஹூத்தி இஸ்லாமிய பயங்கரவாத குழு பயன்படுத்தி வரும் ஹூதைதா துறைமுகம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய அதை அழித்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் அடுத்த 72 மணி நேரத்திற்குள் ஈரான் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அதனுடைய ஆதரவு பெற்ற குழுக்கள் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. ஈரானுடைய ஆதரவு பெற்ற காசாவை சேர்ந்த ஹமாஸ் லபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா ஏமனில் இயங்கி வரும் ஹூத்தி சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கி வரும் பற்பல ஈரானிய ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலில் ஈரானோடு பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அளித்த உரையில் இஸ்ரேலை சுற்றி மிகப் பெரிய அளவில் ஆபத்து சூழ்ந்துள்ளதாகவும் அவற்றையெல்லாம் எதிர்கொள்ள இஸ்ரேலில் அரசும் ராணுவமும் தயாராக உள்ளதாகவும் அறிவித்திருந்தார். இதனை இஸ்ரேலில் இருந்து வரும் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன அதாவது இஸ்ரேலிய எல்லை முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் தளவாடங்களையும் தற்காப்பு ஆயுத அமைப்புகளையும் குறித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.