ஈரானில் அதிபர் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருந்தாலும் ஒட்டுமொத்த இரானிய அரசும் அந்நாட்டின் தலைமை மதகுருவான அயத்தொல்லா அலி காமெனி தான் அங்கு உச்சபட்ச அதிகார மையம் ஆவார். தற்போது இஸ்ரேல் ஈரான் நாட்டுத் தலைநகர் டெகரானில் அதிகாரப்பூர் பயணமாக வந்த அம்மாஸ் பயங்கரவாத இயக்க தலைவர் மீது தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது மேலும் லெபனானில் ஏங்கி வரும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் மூத்த ராணு தலைவர் ஃபுவாத் ஷூக்கர் மீதும் தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது.
இதற்கிடையே சிரியா நாட்டில் தங்கி இருந்து இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு திட்டமிட்டு மூளையாக செயல்பட்டு வந்த மூத்த ஈரானிய ராணுவ அதிகாரி ஒருவர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அவரையும் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன இந்த நிலையில் ஈரான் உடைய உச்சபட்ச தலைவரான அயத்தொல்லா அலி காமெனி ஈரானிய ராணுவத்திற்கு இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஈரானில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை அன்று காலை கமாஸ் தலைவர் இஸ்மாயில் சனியை கொல்லப்பட்ட பிறகு ஈரான் தலைநகர் டெக்ரானில் கூடிய அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அயத்தொல்லா அலி காமெனி செல் மீதான நேரடியான தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதை ஈரானை சேர்ந்த மூன்று மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இவர்களில் இருவர் ஈரானுடைய புரட்சிகர இஸ்லாமிய பாதுகாப்பு படையின் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சில மாதங்கள் முன்பு இந்த ஆண்டு சிரியா நாட்டுத் தலைநகர் தமாஸ்கஸ் நகரத்தில் அமைந்துள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய துல்லியமான குண்டு வீச்சு தாக்குதலில் மூத்த ஈரானிய ராணுவ அதிகாரி மற்றும் அவரை சந்திக்க வந்திருந்த ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக அதைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது தனது ஆதரவு குழுக்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை தாக்குதல் துரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி செய்தது ஆனால் அந்த தாக்குதல்கள் தோல்வியில் முடிந்தன அப்போது இஸ்ரேலும் இவனை ஏவி பதில் தாக்குதல் நடத்தியது.
எந்த வகையில் தற்போது மீண்டும் இரா இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக குறிப்பிடும் நிலையில் மூத்த ஈரானிய ராணுவ தளபதிகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை ஒட்டியுள்ள இஸ்ரேலியா ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றையும் அதே நேரத்தில் ஏமன் சிரியா ஈராக் காசா லெபனான் ஆகிய பகுதிகளில் உள்ள தனது ஆதரவு குழுக்களையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரேல் மீது ஒரு மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் ஒன்றையும் முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஈரான் எந்தத் திட்டத்தை தேர்வு செய்து அதை செயல்படுத்த போகிறது என்பதை காலம் தான் நமக்கு வெளிப்படுத்த வேண்டும் மேலும் இது இஸ்ரேலுடன் நேரடியான ஒரு முழு அளவிலான போரை ஏற்படுத்தும் அளவுக்கான பிரம்மாண்ட தாக்குதலாக இருக்குமா? அல்லது வெறுமனே ஒரு பதில்தான்க்குதலாக அதாவது இஸ்ரேலை அச்சுறுத்தும் தாக்குதலாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் தாக்குதலாக மட்டும் இருக்குமா என்பதையும் காலம்தான் நமக்கு காட்டித் தர வேண்டும என சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஈரானின் அதிபரான மசூத் பெஸ்கேசியான் ,புதிய இரானிய வெளியுறவு அமைச்சர் அலி பகாரி, ஈரானிய ராணுவம் மற்றும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர படை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் தூதர் ஆகியோர் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். ஈரானிய வெளியுறவு அமைச்சர் சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தும் எனவும் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் இஸ்ரேல் நடத்தினால் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கோ உங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை அதில் விடுத்துள்ளார். ஆக ஒட்டுமொத்த வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலும் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.