வங்கக் கடலில் இந்திய கடற்படையின் போர் பயிற்சி !!

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கக் கடலில் இந்திய கடற்படை ஒரு பிரம்மாண்ட Naval Firing Exercise அதாவது இந்திய கடற்படை தனது அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி ஒரு ஒத்திகை ஒன்றை நடத்தி வருகிறது. இந்த பயிற்சிகள் ஆண்டுதோறும் இந்திய கடற்படை மட்டுமல்லாது உலகின் பல்வேறு கடற்படைகளும் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும் ஆனால் இந்த முறை இந்திய கடற்படை நடத்தும் இந்த பயிற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீனாவின் Xioang Yang Hong 03 ஆய்வு கப்பல் இலங்கைக்கும் இந்திய கடற்படை பயிற்சி நடத்த உள்ள இடத்திற்கும் இடையில் இருக்கிறது. அதாவது அந்த குறிப்பிட்ட இடத்தில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இதன் காரணமாகத்தான் இந்த ஆண்டு இந்திய கடற்படை நடத்தும் Naval firing exercise சற்று அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய கடற்படை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தனது தயார்நிலை மற்றும் செயல் திறன்களை இத்தகைய Naval firing exercise உளமாக சுய பரிசோதனை செய்து கொள்வது வழக்கம் ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள படி சீன கப்பலில் நடவடிக்கைகளும் இந்திய கடற்படை நடவடிக்கைகளும் அருகருகே நடப்பதால் இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆய்வுக்கு கப்பல்கள் வந்து செல்வதை இந்தியா ரசிக்கவில்லை அதற்கு இடையே தற்போதைய இந்த நிகழ்வும் இந்தியாவை சற்றே வெறுப்படையை வைத்துள்ளது.

சீனாவை பொறுத்தவரையில் இந்த ஆய்வு கப்பல் ஆனது அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளுக்காக தான் அந்தப் பகுதியில் ஏங்கி வருவதாக தெரிவித்துள்ளது ஆனாலும் சீனாவின் ஆய்வு கப்பல்கள் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளை கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனினும் இந்திய கடற்படை இந்த பயிற்சிகளை முன்னெடுப்பதற்கு காரணம் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் உரிமைகளையும் இறையாண்மையும் நிலைநாட்டும் நோக்கத்தில் ஆனது எனவும் இந்தியா தனது தேசிய நலன்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான தனது உறுதித் தன்மையை இந்த நடவடிக்கை மூலமாக சீனாவுக்கு செய்தியாக தெரிவிப்பதாக பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இமயமலை தொடரை ஒட்டி உள்ள பகுதிகளில் அதாவது கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்சினை கடந்த சில வருடங்களாக நிலை வருகிறது அதிலும் கல்வான் மோதலுக்குப் பிறகு இது தீவிரமடைந்துள்ளது. இப்படி ஏற்கனவே இந்தியா மற்றும் சீனா இடையேயான இருதரப்பு உறவுகள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் சீனாவின் இந்த செயல்பாடு மேலும் சிக்கல்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.