இந்திய கடலோர காவல் படையின் தலைமை தளபதி சென்னையில் மரணம் !!

இந்திய கடலோர காவல் படையின் தலைமை தளபதி டைரக்டர் ஜெனரல் ராகேஷ் பால் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவர் சென்னையில் திறக்கப்பட்ட கடலோர காவல் படை அதிநவீன கடல்சார் மீட்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு மையம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் திறக்கப்பட்ட புதிய கடலோர காவல் படை வானூர்தி தளம் ஆகியவற்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார்.

நேற்றைய தினம் இந்த விழாக்கள் நடைபெற்ற நிலையில் அவற்றில் பங்கு பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங்கம் இந்திய கடலோர காவல் படை தலைமை தளபதி டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் பாலும் சென்னை வந்திருந்தனர். ஆனால் நேற்றைய தினம் காலையிலேயே உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடலோர காவல் படை தலைமை தளபதி டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் பால் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே மேற்குறிப்பிட்ட மையங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் திறந்து வைத்துவிட்டு மாலை திமுக சார்பில் மத்திய அரசின் உதவியோடு நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நாணயம் வெளியீட்டு விழாவிலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உலாவை சிறப்பித்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இந்திய கடலோர காவல் படை தலைமை தளபதி டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் ஏவ வேலு சேகர்பாபு பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் விரைந்து சென்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் மேலும் இன்று காலை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சென்னை ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் பால் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவரது மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்திய தரைப்படை இந்திய விமானப்படை இந்திய கடற்படை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மத்திய தொழில் பாதுகாப்பு படை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை எல்லை பாதுகாப்பு படை மத்திய அமைச்சர். ஹர்தீப் சிங் பூரி போன்றோர் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது ராகேஷ் பால் மிகவும் திறமையான அர்ப்பணிப்பு மிக்க அதிகாரி இவரது தலைமையின் கீழ் இந்திய கடலோர காவல் படை இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக பெரிய முன்னேற்றங்களை கண்டது அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்றார்.

இந்திய கடற்படை தலைமை தளபதி டைரக்டர் ஜெனரல் ராகேஷ் பால் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் தனது பள்ளி மற்றும் உயர்கல்வி படிப்புகளை முடித்த பின்னர் இந்திய கடற்படை அகாடமியில் சேர்ந்து பயிற்சி பற்றி இந்திய கடலோர காவல் படையில் அதிகாரியாக கடந்த 1989 ஆம் ஆண்டு இணைந்தார். இவர் பீரங்கி மற்றும் ஆயுத அமைப்புகளில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இந்திய கடற்படையின் பீரங்கிப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்று இந்திய கடலோர காவல் படை முதல் பீரங்கி தாக்குதல் அதிகாரியான சிறப்பை கொண்டவர்.

1989 முதல் 2024 வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் அனைத்து விதமான இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் பலன்களையும் வழிநடத்தி அனுபவம் வாய்ந்தவர். இடை மதிப்பு கலன்கள் ஆன ICGS C-03, கடற்கரை ரோந்துக்கலனான ICGS அகல்யாபாய், அதி வேக ரோந்துக்கலனான ICGS சுச்சேதா க்ரிபாலனி, விஷ்வந்த் ரக ஆழ்கடல் ரோந்துக்கலனான ICGS விஜித், அதிநவீன ரோந்துக்கலன் ICGS சாமர்த் ஆகியவற்றை வழி நடத்தியுள்ளார்.

மேலும் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இரண்டு முக்கிய கடலோர காவல் படை தளங்களான CGS OKHA மற்றும் CGS VADINAR ஆகியவற்றின் தலைமை கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் இது தவிர இந்திய கடலோர காவல் படையின் உள்கட்டமைப்பு பணிகள் பிரிவின் இயக்குனராகவும் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள இந்திய கடலோர காவல் படை தலைமையகத்தின் நிர்வாகப் பிரிவின் முதன்மை இயக்குனராகவும் பணியாற்றி அனுபவம் மிக்கவர் ஆவார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரை மையமாகக் கொண்டு செயல்படும் இந்திய கடலோர காவல் படையின் வடமேற்கு பிராந்திய தளபதியாகவும் பின்னர் இந்திய கடலோர காவல் படை தலைமையகத்தில் கொள்கை மற்றும் திட்டங்களை கவனிக்கும் துணை இயக்குனர் ஜெனரலாகவும் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட இந்திய கடலோர காவல் படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் ஆகவும் பின்னர் பிப்ரவரி 2023 இந்திய கடலோர காவல் படையின் 25 ஆவது தலைமை தளபதியாக பொறு பெற்றுக் கொண்டார்.

இவரது சேவைகளை பாராட்டி இந்திய அரசு இவருக்கு AVSM – Ati Vishist Seva Medal அதிக விசேஷித்த சேவை பதக்கம், PTM – President’s Tatrakshak Medal ஜனாதிபதியின் கடலோர காவல் படை பதக்கம் மற்றும் TM – Tatrakshak Medal கடலோர காவல் படை பதக்கம் ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது. இவருக்கு தீபா பால் என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.