இன்று 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி !!
1 min read

இன்று 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி !!

இன்று நாடு முழுவதும் 78 வது இந்திய சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று நமது நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் நான் சண்டையில் வீர மரணம் அடைந்துள்ளார். காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள அஸ்ஸார் பகுதியில் மிகப் பிரபலமான சுற்றுலா தளமான பானி டாப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் தான் அந்த இளம் ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்துள்ளார் மேலும் ஒரு அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதாவது கடந்த 13ஆம் தேதி பானி டாப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை பற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை என சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒட்டுமொத்த பகுதியையும் சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முதல் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையேயான துப்பாக்கி சண்டை தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் சண்டையின்போது படை நிறை வழி நடத்திக் கொண்டிருந்த ராணுவ அதிகாரி படுகாயமடைந்தார் உடனடியாக அவரை மீட்டு சகவீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை எடுத்து பயங்கரவாதிகள் எங்கும் தப்பி விடாமல் இருக்க சுற்றி வளைத்து ராணுவத்தினர் அரண் அமைத்தனர்.

அடுத்த நாள் காலை வெளிச்சம் வந்ததும் மீண்டும் பயங்கரவாதிகளுடன் ஆன துப்பாக்கி சண்டை துவங்கியது. இந்த துப்பாக்கி சண்டையின் போது கேப்டன் தீபக் சிங் எனும் இளம் ராணுவ அதிகாரி சம்பவ இடத்திலேயே குண்டு துளைத்து வீர மரணம் அடைந்தார். அதே நேரத்தில் கேப்டன் தீபக் சிங் ஒரு பயங்கரவாதியையும் சுட்டு வீழ்த்தினார் கொல்லப்பட்ட பயங்கரவாதி இடம் இருந்து அமெரிக்க தயாரிப்பு எம் 4 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இது ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கிடைத்த ஆயுதமாக இருக்கலாம் என ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இனியும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் வரை பதுங்கி இருப்பதாகவும் அவர்களை தேடி வீழ்த்துவதற்கு இராணுவம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறுகின்றன. என்கவுண்டர் நடைபெறுவதற்கு முன்னர் தான் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுச்சிந்திர குமார் செனாப் பள்ளதாக்கு பகுதிக்கு குறிப்பாக தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார.

தோடா மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் அரை டஜனுக்கும் அதிகமான பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது இந்த தாக்குதல்களில் நான்கு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் அவர்களில் ஒரு கேப்டன் அந்தஸ்திலான அதிகாரியும் அடக்கம் மேலும் இந்த காலகட்டத்தில் மூன்று வெளிநாட்டு பயங்கரவாதிகளை இந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் கூட்டு நடவடிக்கைகள் மூலமாக கொன்றுள்ளனர். அதேபோல் கடந்த 40 நாள் காலகட்டத்தில் தோடா மற்றும் கத்துவா மாவட்டங்களில் ஒரு மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட 11 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் தீபக் சிங் வீர மரணம் அடைந்ததை எடுத்து இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்தியத்தின் கீழ் இயங்கும் பதினாறாவது கோர் படைப்பிரிவு சமூக வலைதளத்தில் வீர மரணம் அடைந்த கேப்டன் தீபக் சிங்குக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும் அவரை இழந்து வாடும் அவரது கூறும் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் மேலும் அவரது குடும்பத்தினருடன் இந்த கடினமான காலகட்டத்தில் இந்திய ராணுவம் உறுதுணையாக நிற்கும் எனவும் பதிவிட்டுள்ளது.

என்கவுண்டர் நடைபெற்ற பகுதி அகார் பகுதியில் உள்ள காடுகள் ஆகும், இந்தக் காட்டுக்கு மிக மிக உள்பகுதியில் மிக அடர்த்தியான சூழலில் கரடு முரடான நிலப்பரப்பு அதிக பணி மூட்டம் ஆகியவற்றுக்கிடையே பல மைல் தொலைவு நடந்து சென்று பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவத்தினர் சண்டை இட்டு வருகின்றனர். இந்த சண்டையும்போது சுற்றுலா வந்திருந்த ஒரு சுற்றுலா பயணி ஒருவரும் காயம் அடைந்ததாகவும் ஆனால் அவர் சரியான நேரத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீர மரணம் அடைந்த கேப்டன் தீபக்சிங் இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்புப்படையான ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையின் 48ஆவது பட்டாலியனில் சேவை புரிந்து வந்தார் இந்த பட்டாலியன் கார்வால் ரைஃபில்ஸ் ரெஜிமென்ட் வீரர்களை உள்ளடக்கியதாகும். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆனால் தற்போது அவரது குடும்பம் குத்துரக்கண்டு மாநிலம் டேராடூனில் வசித்து வருகிறது. ஒரு தந்தை மகேஷ் சிங் உத்தராகண்ட் மாநில காவல்துறையின் டிஜிபி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார், கேப்டன் தீபக் சிங் பள்ளிக்கல்வி முடித்த பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து பின்னர் இந்திய ராணுவ அகாடமிளும் பயிற்சி முடித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கார்வல் லைசன்ஸ் ரெஜிமென்ட்ரி அதிகாரியாக இணைந்தார்.

இவரது குடும்பத்தில் இவரது தந்தை தாய் மற்றும் திருமணமான இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். உத்ராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கேப்டன் தீபக் சிங் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களை தெரிவித்து அவரது வீரத்தை புகழ்ந்துள்ளார். அதேபோல உத்தரகாண்ட் மாநில டிஜிபி அபினவ் குமார் தனது முன்னாள் உதவியாளரின் மகன் தீபக்சிங் நாட்டிற்காக வீர மரணம் அடைந்ததை அடுத்து அந்த குடும்பத்திற்கு இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொண்டு ஒட்டு மொத்த உத்தரகாண்ட் மாநில காவல்துறையும் அந்த குடும்பத்திற்கு உறுதுணையாக நிற்கும் என கூறியுள்ளார்.