பழைய ஜாகுவார் போர் விமானங்களுக்கு ஓய்வு; மேலும் மேம்படுத்தப்படும் ஜாகுவார் போர் விமானங்கள் !!
இந்திய விமான படையில் 120க்கும் மேலான ஜாகுவார் போர் விமானங்கள் சேவையில் உள்ளன. இவற்றை 1970களில் இந்திய விமானப்படை சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கூட்டு நிறுவனமான SEPECAT இடம் இருந்து வாங்கியது அவற்றில் 40 விமானங்கள் நேரடியாக டெலிவரி செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள விமானங்கள் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படை இடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தப் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. இவற்றை பிரத்தியேகமாக தரைத்தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது மேலும் வான்வழி அணு ஆயுத தாக்குதல் திறனையும் இந்த விமானங்கள் பெற்றுள்ளது தற்போது ரபேல் மற்றும் மிராஜ்-2000 ஆகியவற்றுடன் ஜாகுவார் போர் விமானங்களும் வான்வெளி அணு ஆயுத தாக்குதல் பணியில் உள்ளன. மேலும் இந்தப் போர் விமானங்கள் இந்திய அமைதி காப்பு படையின் சார்பாக இலங்கையிலும் அதேபோன்று 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் யுத்தத்திலும் பங்கு பெற்றன.
ஆண்டுகள் செல்ல செல்ல இவற்றின் வயதும் அதிகரித்து வருவதால் இவற்றில் மிகப் பழைய விமானங்களை படையிலிருந்து விலக்கவும் மீதமுள்ள விமானங்களை மேம்படுத்தவும் இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது அந்த வகையில் வருகிற 2031 ஆம் ஆண்டுக்குள் 60 ஜாகுவார் போர் விமானங்களை இந்திய விமானப்படை படையிலிருந்து விலக்கி ஓய்வு கொடுக்கவும் இந்த 60 போர் விமானங்களும் DARIN – 2 ரகத்தை சேர்ந்தவை எனவும் 2028ஆம ஆண்டு முதல் படைவிலக்க நடவடிக்கைகளை துவங்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி படை விலக்கம் செய்யப்படும் அறுபது SEPECAT JAGUAR DARIN-2 செபிகேட் ஜாகுவார் டேரின்-2 போர் விமானங்களுக்கு பதிலாக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் HAL LCA TEJAS Mk1A தேஜாஸ் மார்க் 1ஏ இலகுரக போர் விமானங்கள் படையில் இணைக்கப்படும் என தெரிகிறது ஆனால் இந்த திட்டமும் அமெரிக்கா GE F404 ஜெட் என்ஜினுடைய டெலிவரிகளை விரைவாக துவக்கினால் மட்டுமே சாத்தியப்படும் சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே இந்திய விமானப்படையின் மேலும் அறுபது செபிகேட் ஜாகுவார் போர் விமானங்கள் DARIN-3 ரகத்திற்கு தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன தற்போது இந்த 60 விமானங்களும் அந்த மேம்பாட்டு பணிகளில் உள்ளதாகவும் இஸ்ரேலில் நிறுவனமான இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை IAI Israeli Aerospace Industries தயாரிக்கும் எல்டா ELTA EL/M-2052 AESA ரேடார், ASRAAM Advanced Short Range Air to Air Missile அதாவது அதிநவீன குறுந்தூர வான் இலக்கு தாக்குதல் ஏவுகணை மற்றும் போர் விமானிகள் எளிதாக இலக்குகளை குறி வைக்க உதவும் HMDS Helmet Mounted Display System, ஏவியானிக்ஸ், அதிநவீன கணிணி, தானியங்கி பைலட் போன்ற தொழில்நுட்பங்கள் இந்த விமானங்களில் இணைக்கப்படும்.
DARIN உடைய விரிவாக்கம் Display Attack Ranging Inertial Navigation ஆகும், இது ஜாகுவார் விமானங்களில் இருந்த பிரிட்டிஷ் NAWASS தொழில்நுட்பத்தை விடவும் அதிநவீனமானது நம்பகத்தன்மை மிகுந்ததும் ஆகும். டேரின் தொழில்நுட்பத்தில் இங்கிலாந்து பிரஞ்சு இஸ்ரேலிய மற்றும் இந்திய தொழில் நுட்ப அமைப்புகள் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றன,முதலில் இந்த திட்டத்தின் கீழ் புத்தம் புதிய அதிநவீன சக்தி வாய்ந்த இன்ஜின்களை இந்த விமானங்களில் ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த எஞ்சின் மாற்றம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த அறுபது செபிகேட் ஜாகுவார் SEPECAT JAGUAR போர் விமானங்களும் டேரின்-3 DARIN-3 ரகத்திற்கு தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஏறத்தாழ 2040 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையின் சேவையில் இருக்கும் என கருதப்படுகிறது அதிலும் குறிப்பாக இந்திய விமானப்படை இந்த விமானங்கள் மூலம் தனது ஊடுருவி தரை தாக்குதல் நடத்தும் திறன்களை இழக்காமல் தன்வசம் வைத்திருக்கும் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.