வங்கதேசத்தில் தற்போது நிலவும் குழப்பம் மற்றும் பிரச்சனைகள் காரணமாக இந்திய வங்கதேசம் இடையான சர்வதேச எல்லோரும் மிகவும் சூழலை கண்காணிக்க இந்திய உள்துறை அமைச்சகம் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக இந்திய அரசின் இணைச் செயலாளர் ஸ்மிதா விஜூ தெரிவித்துள்ளார். அதாவது இந்திய எல்லை பாதுகாப்பு படையின் கிழக்கு கட்டளையக தலைமை அதிகாரி ADG , BSF தெற்கு வங்காள IG, BSF திரிபுரா IG, LPAI உறுப்பினர் மற்றும் செயலாளர் LPAI ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவர்.
இந்த குழுவானது வங்கதேச எல்லை பாதுகாப்பு படையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எனவும் வங்கதேச இந்தியா இடையேயான எல்லையோரம் நிலவும் பாதுகாப்பு சூழல்கள் சவால்கள் குறித்து கண்காணித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை வங்கதேச எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து மேற்கொள்வது வங்கதேசத்தில் உள்ள அதாவது எல்லை அருகாமையில் உள்ள கிராமங்களில். சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
இதுவரை நான்கு முறை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து தகுந்த ஆவணங்கள் இன்று இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்கதேச குடிமக்களை திரும்ப வங்கதேசத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் யாரிடமும் அவர்களது மதம் பற்றிய கேள்விகளை முன் வைப்பதில்லை எனவும் மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் பொதுவாக சோதித்து ஆவணம் இல்லாத அனைவரையும் திரும்ப அனுப்பி வரும் பணிகளில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திலும் தனது சமூக வலைதள பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
இந்திய உளவுத்துறை அளித்துள்ள தகவலின் படி மிகப்பெரிய அளவில் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக மக்கள் இந்தியாவை நோக்கி வரும் வாய்ப்புகள் உள்ளதாக பெரிய வருகிறது குறிப்பாக வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு தான் ஆபத்தான கட்டம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கால்நடைகள் போதைப்பொருட்கள் ஆகியவற்றை கடத்தும் கும்பல்களின் நடவடிக்கைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வங்கதேசம் உடனான சர்வதேச எல்லையோரம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.
மேலும் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம் திரிபுரா அஸ்ஸாம் மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் எல்லோரும் உள்ள கிராமங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர் அதன் ஒரு பகுதியாக கிராமத்தினர் மற்றும் கிராம தலைவர்கள் ஆகியோரை சந்தித்து வங்கதேசத்துடனான எல்லையோரம் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் மற்றும் ஊடுருவல் முயற்சிகளை கண்டாலோ அல்லது அத்தகைய செயல்பாடுகளைப் பற்றி தெரிய வந்தாலோ உடனடியாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர் பேரவையினர் ஒரு வங்கதேசத்தவரை கூட இந்திய எல்லைக்குள் அனுமதிக்க கூடாது என இந்தியா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளனர் அதாவது NESO – North East Students Organisation வடகிழக்கு மாணவர் அமைப்பு இந்த கடிதத்தை எழுதியுள்ளது.
மேலே குறிப்பிட்ட வடகிழக்கு மாணவர் அமைப்பில் அனைத்து அசாம் மாணவர் பேரவை, காசி மாணவர் பேரவை, காரோ மாணவர் பேரவை, அனைத்து அருணாச்சலப் பிரதேச மாணவர் பேரவை, நாகா மாணவர் ஒன்றியம், அனைத்து மணிப்பூர் மாணவர் பேரவை, மிசோரம் மாணவர் பேரவை மற்றும் திரிபுரா மாணவர் ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இவர்களின் கடிதத்தில் கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் வட கிழக்கு மாநிலங்களில் சட்ட விரோதமாக வங்கதேசத்தவர்கள் நுழைந்து உள்ளதால் பல பகுதிகளில் பூர்வ குடிகளே சிறுபான்மையினராக மாறியுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது ஆகவே தற்போது ஒரு வங்கதேச தவறை கூட இந்திய எல்லைக்குள் அனுமதிக்க கூடாது என வடகிழக்கு மாணவர்கள் கூட்டமைப்பு இந்திய உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கிடையே வங்கதேசத்தில் நிலவும் மோசமான அரசியல் சூழல் காரணமாக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வர்த்தக உறவுகளும் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. உணவு விவசாயம் பின்னலாடை மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் துறைகளில் தொழில் நடத்தி வரும் பல இந்திய தொழிலதிபர்கள் இதன் காரணமாக அச்சத்தில் உள்ளனர்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மிக வலுவான ஆழமான வர்த்தக உறவுகள் உள்ளன. இந்தியாவின் முதல் 10 ஏற்றுமதி நாடுகளில் வங்கதேசமும் ஒன்றாகும். கடந்த நிதி ஆண்டில் 11 பில்லியன் டாலர்கள் அதாவது 91300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் தேயிலை காப்பி வாகன உதிரி பாகங்கள் மின்சாரம் விவசாயம் இரும்பு உலோகங்கள் பிளாஸ்டிக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து உளளது மேலும் 1.8 பில்லியன் டாலர்கள் அதாவது ஏறத்தாழ 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தோல் பொருள்கள் தோல் ஆடைகள் மற்றும் இதர பொருட்களை இந்தியா வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
அதேபோல வங்கதேசத்தின் ஆடை தயாரிப்பு துறை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியை அதிக அளவில் நம்பியுள்ளது. வங்கதேசத்தின் ஆடை ஏற்றுமதிகள் சுமார் 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டவை ஆகும் இது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய் ஆகும் இத்தகைய பிரம்மாண்ட ஆடை ஏற்றுமதிக்கு அத்தியாவசியமான பருத்தி பெருமளவில் இந்தியாவிலிருந்து தான் செல்கிறது. இந்திய பருத்தி ஏற்றுமதி கூட்டமைப்பின் தலைவர் அப்துல் இது பற்றி பேசும்போது உலகம் முழுவதும் சுமார் 2.8 மில்லியன் பேல் பருத்தியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது அதில் 2 மில்லியன் பேல்கள் வங்கதேசத்திற்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேபோல வங்கதேச மக்களுக்கான பெரும்பாலான உணவு பொருட்கள் மட்டும் தானியங்கள் இந்தியாவிலிருந்து தான் செல்கின்றன. இந்தியாவை தான் வங்கதேசம் கோதுமை பாஸ்மதி அரிசி பருப்பு வெங்காயம் சின்ன வெங்காயம் கடுகு கடலை வகைகள் புளி இஞ்சி மஞ்சள் உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கு நம்பி உள்ளது.
அதேபோல வங்கதேசத்துடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலம் மிகப்பெரிய அளவில் வங்கதேச சுற்றுலா பயணிகளை கவரும் மையமாக உள்ளது. தினந்தோறும் பல வங்கதேச சுற்றுலாப் பயணிகள் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்தது அவர்களுக்கான உணவு பதார்த்தங்கள் தயாரிக்கும் உணவகங்கள் மற்றும் அவர்கள் தங்கி செல்வதற்கான சிறு மற்றும் நடுத்தர ஹோட்டல்கள் ஆகியவை தற்போது மிகப்பெரிய அளவில் வெறிச்சோடி காணப்படுகின்றன. பல ஹோட்டல் மற்றும் உணவகங்களில் 100% ஆட்களை இல்லாத நிலை காணப்படுவதாக அவற்றின் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இது எப்படியோ இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வர்த்தக உறவுகள் ஒருவரை ஒருவர் மிகப்பெரிய அளவுக்கு சார்ந்து இருப்பதாலும் வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளதாலும் விரைவில் எல்லைக்கு அப்பால் அதாவது வங்கதேசத்தில் நிலைமைகள் சாதாரண நிலையை அடையும் என்ற நம்பிக்கையில் இரு தரப்பில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் அவற்றை நம்பியுள்ள பணியாளர்கள் உள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் எல்லையோரம் சிறிய அளவில் வர்த்தக செயல்பாடுகள் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.