ஹூத்திக்களின் கப்பல்களை பின் தொடர்ந்து தாக்கும் புதிய யுக்தி !!
எமன் நாட்டில் இருந்து இயங்கி வரும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு ஈரான் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஆகியவற்றிற்கு ஆதரவாக ஏடன் வளைகுடா வழியாக கடந்து செல்லும் வணிக கப்பல்கள் மீது கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை தாக்குதல் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இவற்றை அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு கடற்படை குழு மேலும் இந்தியா போன்ற நாடுகள் தனியாகவும் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ஹீத்திக்கள் வணிக கப்பல்களை தாக்குவதற்கு ஒரு புதிய இடத்தை கையாண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எகிப்தின் சூயஸ் கால்வாய் முதல் ஏடன் வளைகுடா வரையிலான செங்கடல் பகுதியின் ஒரு முனை துவங்கி மறுமுனை வரை மேலும் கீழுமாக பயணிக்கும் கப்பல்களை பின் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தான் அது.
அந்த வகையில் ஒரு வணிக கப்பல் 12 மணி நேரத்தில் மூன்று முறை தாக்கப்பட்டுள்ளது. முதல் தாக்குதல் சமீபத்தில் இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலுக்கு உள்ளான ஏமனின் ஹோதைதா துறைமுகத்திலிருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்றது. அடுத்த தாக்குதல் அடுத்த சில மணி நேரங்களில் நடைபெற்று உள்ளது மூன்றாவது தாக்குதல் ஹோதைதாவில் இருந்து 180 கிலோமீட்டர் வட மேற்கே மீண்டும் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதல் அனைத்தும் ஒரே முறையில் நடைபெற்று உள்ளது. இது எப்படியோ இந்த தாக்குதலில் கப்பலும் கப்பலில் இருந்த மாமி நிகழும் பாதுகாப்பாக இருந்ததாக இங்கிலாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
அதேபோல கடந்த வாரம் Suezmax கிரகத்தை சேர்ந்த அதாவது சுமார் ஒன்றரை லட்சம் டண்களுக்கு மேல் எடை கொண்டசூயஸ் கால்வாயில் முழு சுமையுடன் பயணிக்கும் திறன் கொண்ட பிரமாண்ட கப்பல் மீது 24 மணி நேரத்திற்குள்ளாக நான்கு முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது ஏமன் நாட்டின் ஹூத்திக்கள் முதல் கப்பல் மீது தாக்குதல் நடத்தி 280 நாட்களுக்கு மேலாக ஆகிறது.
ஏடன் வளைகுடா பகுதியில் ஹூத்திக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நடத்தி வரும் அமெரிக்க கடற் படையின் வைஸ் அட்மிரல். ஜார்ஜ் விகாஃப் பேசும்போது ஹூத்திக்களின் திறன்களை நாம் பெருமளவில் குறைத்துள்ளோம் அதில் சந்தேகம் இல்லை ஆனால் அவர்களின் தாக்குதல்களை நிறுத்தியுள்ளோமா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பதாகும். அமெரிக்க கடற்படையின் நோக்கம் அவர்களின் திறன்களை குறைத்து கடல் சார் சட்ட திட்டங்கள் மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்தி உறுதி செய்வதாகும். அதே நேரத்தில் இதற்கு தீர்வு ஒரு சர்வதேச அளவிலான கொள்கை வகுப்பு ஆகும் அதற்கான நேரத்தையும் எங்களது நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்துவது தான் எங்களது பணி எனக் கூறியுள்ளார்.