பாலஸ்தீன இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் அமைப்பின் தலைவன் இஸ்மாயில் ஹானியே சமீபத்தில் அவர் தஞ்சம் புகுந்திருந்த கத்தார் நாட்டில் இருந்து ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு அந்நாட்டின் புதிய அதிபர் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை இதான் தலைநகர் டெக்ரானில் அவர் தங்கி இருந்த அறையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் புதிய அதிபரான மசூத் பெஸ்கேசியன் உடைய பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு அவரை சந்தித்து இஸ்மாயில் பேசினார். அந்த சந்திப்பின்போது ஈரான் புதிய அதிபர் பாலஸ்தீன நோக்கத்திற்கு ஈரான் எப்பொழுதும் ஆதரவளிக்கும் என தமாஷ் தலைவரிடம் உறுதி அளித்ததாகவும் இதைத்தொடர்ந்து அவர் தனது அறைக்கு சென்று தங்கி இருந்தபோது அதிகாலை நேரம் இரண்டு ஏவுகணைகள் அந்த அறையில் மோதி வெடித்ததாகவும் இதில் இஸ்மாயில் கொல்லப்பட்டதாகவும் ஈரானிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் ஈரானிய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் நடைபெற்றதாகவும் உலக பாதுகாப்பு நிபுணர்கள் இது பற்றி கூறும் போது இந்த நேரத்தை இவ்விடத்தையும் இஸ்ரேல் தேர்வு செய்ததற்கான காரணம் ஈரானை சர்வதேச அரங்கில் அவமானப்படுத்துவதாகும் என தெரிவித்தனர். ஈரான் நாட்டை சேர்ந்த மத்திய கிழக்கு புவிசார் அரசியல் பற்றி படித்து வரும் அபாஸ் அஸ்லானி கூறும் போது இது ஈரானின் பாதுகாப்பு திறன்களை முற்றிலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆகவே இதற்கு எப்படியேனும் பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று ஈரான் விரும்பும் என தெரிவித்து உள்ளார்.
இஸ்மாயில் காணியே ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக கடந்த 20 ஆண்டுகாலமாக ஏங்கி வந்தவர் ஆவார். கடந்த 2006 ஆம் ஆண்டு 44 வயதான இஸ்மாயில் ஹமாஸ் இயக்கத்தை தேர்தல் மூலம் பாலஸ்தீனில் காசா பகுதி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வழிவகை செய்த நபர் ஆவார். ஆனால் சர்வதேச நாடுகள் இவர் தலைமையிலான அரசுடன் இணைந்து பணியாற்ற மறுப்பு தெரிவித்ததால் அம்மாசியக்கம் இவரை பதவியில் இருந்து நீக்கியது. ஆனால் 2017 ஆம் ஆண்டு மாஸ் இயக்கம் இவரை அரசியல் பிரிவு தலைவராக நியமனம் செய்த நிலையில் 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு இவரை பயங்கரவாதியாக அறிவித்தது.
அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு காசாவை விட்டு வெளியேறி வளைகுடா நாடான கத்தாரில் அடைக்கலம் புகுந்து அங்கு வாழ்ந்து வந்தார். இதற்கிடையே தற்போது காசாவில் நடைபெறும் யுத்தத்தில் இஸ்மாயில் ஆணியே வின் குடும்பத்தினர் இஸ்ரேலில் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இவரது கொலை கத்தார் எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகியவை தலையிட்டு நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸ் இயக்கத்தின் சார்பாக இவர் பங்கேற்று வந்த நிலையில் தற்போது அந்த பேச்சுவார்த்தைகளில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் போது ஒரு தரப்பு மற்றொரு தரப்பினரை கொலை செய்தால் இதில் எப்படி தீர்வு கிடைக்கும் என கண்டனம் பதிவு செய்துள்ளார். மேலும் கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன கண்டன அறிக்கையில் இஸ்ரேலின் இந்த தான்தோன்றித்தனமான செயல்பாடு ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் மிக ஆபத்தான நிலைக்கு உள்ளாக தள்ளிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் அரசை பொருத்தவரையில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் சொல்லியாக வேண்டும் எனவும் நிச்சயமாக இதற்கு ஈரான் பழிவாங்கியே தீரும் எனவும் ஈரான் உடைய வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஆகவே அமெரிக்காலது இஸ்ரேல் உங்களது வால்பரப்பை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஈரானின் அச்சபட்ச தலைமையான கொமேனி இராணி இராணுவத்திற்கு இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் இயக்கத்தை பொருத்தமட்டில் தற்போது அடுத்த தலைமை யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது காலேத் மஷால் எனும் மூத்த ஹமாஸ் நிர்வாகி மற்றும் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹானியவுக்கு நெருக்கமான காலில் அல் ஹய்யா ஆகியோரில் ஒருவர் அடுத்த தலைவர் ஆகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது அதே நேரத்தில் மற்றொரு முக்கிய ஹமாஸ் நிர்வாகியான யாகியா சின்வார் காசா பகுதிக்கு பொறுப்பான ஹமாஸ் பிரிவுகளுக்கு தலைமை வகிப்பார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அல்ஜசீரா ஊடகத்தின் முக்கியமான செய்தியாளர் ஒருவர் பேசும்போது நிச்சயமாக அமெரிக்காவின் அனுமதியின்றி இஸ்ரேலிய பிரதமர் இத்தகைய அதிரடி தாக்குதலுக்கு அனுமதி அளித்திருக்க வாய்ப்பில்லை அதுவும் இத்தகைய தாக்குதல் நடத்த மிகவும் துல்லியமான உழவு தகவல்கள் தேவைப்படும் அந்த தகவலை நிச்சயமாக அமெரிக்க வழங்கி உதவி இருக்கலாம் எனவும் கூறுகிறார். இதே கருத்தை தான் ஈரானி அரசும் முன் வைத்துள்ளது நிச்சயமாக இஸ்ரேலை பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள போது அங்கு அமெரிக்க அரசின் அனுமதி பெற்று உதவி பெற்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிலிங்கன் இஸ்மாயில் ஹானிய மீதான தாக்குதலில் அமெரிக்காவுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது மேலும் இது பற்றிய எந்த தகவலும் எங்களுக்கு தரப்படவில்லை எனக்கு உரியுள்ளார். இந்த தாக்குதல் பற்றி சீனா ரஷ்யா துருக்கி ஆகிய நாடுகள் தங்களது கண்டனத்தையும் கவலைகளையும் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
ஈரான் அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது மேலும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரு சிறப்பு தொழுகை நடத்தி இஸ்மாயீலின் உடலுக்கு இறுதி மரியாதை செய்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு விமானம் மூலம் உடல் அனுப்பி வைக்கப்படும் எனவும் அங்கு மீண்டும் இறுதி மரியாதை செய்யும் விதமாக சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு கத்தாரின் இரண்டாவது பெரிய நகரமான லூசாய்லில் இஸ்மாயில் ஹானிய வின் உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.