இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இடைக்கால அரசின் தலைவர் !!

சமீபத்தில் வங்கதேசத்தின் பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனா அந்நாட்டில் நடைபெற்று வந்த தீவிரமான போராட்டங்கள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்ததை அடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முனைவர் முஹம்மத் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஒரு பெற்றுக் கொண்டுள்ளது. தற்போது இந்த இடைக்கால அரசின் தலைவரான முனைவர் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேசத்தின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி தலைவரான பேகம் கலிதா ஜியா ஆகியோர் இந்தியாவிற்கு கண்டனங்களையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

பேகம் கலிதா ஜியா பேசும்போது இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையேயான ஒத்துழைப்பு ஒருபோதும் சாத்தியமாகாது காரணம் வங்கதேசத்தில் எதிரியான ஷேக் ஹசீனாவை இந்தியா பாதுகாத்து அரவணைத்து அவருக்கு உதவிகளையும் செய்து வருகிறது மேலும் வேகம் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி இந்தியாவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பேகம் கலிதாஜியா பொதுவாகவே பாகிஸ்தானுக்கு ஆதரவான தலைவராக அறியப்படுகிறார் இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவை குறிப்பிட்டு தெற்காசிய பிராந்தியத்தில் எந்த பெரிய சக்தியும் வளர்வதை நாங்கள் விரும்பவில்லை காரணம் அது இந்த பிராந்தியத்தில் சமநிலையை பாதிக்கும் என பேசினார்.

அதேபோல வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் ஆன முனைவர் முகமது யூனுஸ் இந்தியாவின் என் டி டிவி NDTV ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வங்கதேசம் ஸ்திரத்தன்மையை இழந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மேற்கு வங்கம் மாநிலம் மற்றும் மியான்மர் இதனால் பாதிக்கப்பட்டு ஸ்திரத்தன்மையை இழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் பேசும் போது வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதோ அல்லது இந்தியாவிற்கு அடைக்கலம் கொடுப்பதோ சரியானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பாராளுமன்ற மக்களவையில் பேசும்போது வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பன்னாட்டு முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து அவருடன் அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி விவாதித்து வருவதாகவும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளதாக அறிவித்தார். அதேபோல இந்திய அரசு வங்கதேச ராணுவம் மற்றும் இடைக்கால அரசுடன் தொடர்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடைபெறும் கொடூர தாக்குதல்கள் காரணமாக இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் நோக்கில் தினந்தோறும் இந்தியா எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த சிறுபான்மையினர் சாரி சாரையாக வந்த வண்ணம் உள்ளனர். மேற்கு வங்கம் மாநிலம் குச் பிஹார் மாவட்டத்தின் சித்தாள் குச்சி பகுதியில் அமைந்துள்ள இந்திய வங்கதேச எல்லையோரம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 1000க்கும் மேற்பட்ட வங்கதேச இந்துக்கள் வந்துள்ளனர் இதைத்தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மிகவும் கடுமையாக போராடி அவர்களை இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்த தகவலின் படி கடந்த ஒரு சில வாரங்களில் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் நோக்கில் வந்த மிகப்பெரிய கூட்டம் இதுவாகும் எனக் கூறினார். அதேபோல கோச் பிஹார் மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள பத்தாம் துள்ளி கிராமத்தின் அருகே அமைந்துள்ள சர்வதேச எல்லை வேலிக்கு மறுபக்கத்தில் மிகப்பெரிய அளவில் வங்கதேச இந்துக்கள் இந்திய எல்லைக்குள் நுழையும் நம்பிக்கையோடு பல மணி நேரம் நின்று திரும்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் வங்கதேசத்தின் ரம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தோய் கவா மற்றும் கெந்துகுரி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் எனவும் திரும்பி சென்றால் மிகப்பெரிய ஆபத்து தங்களுக்கு காத்திருப்பதாகவும் கூறி திரும்பி செல்ல மறுத்துள்ளனர் மேலும் அவ்வப்போது ஜெய் ஸ்ரீ ராம் கோசத்தை எழுப்பிய வண்ணம் இருந்துள்ளனர் ஆனாலும் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை இங்கே எல்லைக்குள் அனுமதிக்கவில்லை.

அதேபோல மேற்குவங்க மாநிலத்தின் 24 பர்கானா மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வங்கதேசத்தின் பிரோஜ் பூர் பகுதியில் அமைந்துள்ள பரத் காதி கிராமத்தைச் சேர்ந்த பக்தி தாலி என்பவர் முன்னமே பெற்றிருந்த மருத்துவ விசாவின் மூலமாக இந்தியாவுக்குள் வந்துள்ளார். அவரைப் போன்று பார்த்தா தாஸ் மகிமா அகத்தர் போன்றவர்களும் வந்துள்ளனர் இவர்கள் கூறும்போது கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி இவர்களும் இவர்களது கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஷேக் கசினாவின் அவாமிலி கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தை சுற்றி வளைத்து ஒரு பெரிய கும்பல் அவர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் போதிய பணத்தை கொடுக்காத நிலையில் கடும் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் சரியாக உறங்கவில்லை என தெரிவித்தனர்.

வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை பாதிப்பால் நாளுக்கு நாள் வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களின் மற்றும் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது கலர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இவர்களை தவிர ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அரசு தற்போது பொறுப்பேற்றுள்ள வங்கதேச இடைக்கால அரசுடன் இது தொடர்பாக தொடர்பில் உள்ளதாகவும் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் புல்லட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் மோடியும் இது பற்றி தனது அச்சத்தை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் இந்திய அரசு தொடர்ந்து இந்திய வங்கதேச எல்லோரும் நிலவும் சூழல் மற்றும் வங்கதேசத்தில் உள்ள அரசியல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு சூழல் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய அரசு இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றை உச்சகட்ட உஷார் நிலையில் வைத்திருப்பதாகவும் வங்கதேசத்துடனான ரயில் சேவைகளை கால வரைின்றி நிறுத்தி உள்ளதாகவும் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக விசா மையங்களை காலவரை இன்றி மூடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது மேலும் இந்திய வங்கதேச எல்லையோரம் குவியம் வங்கதேச குடிமக்களை திரும்ப கொண்டு செல்லுமாறு இந்திய எல்லை பாதுகாப்பு படை வங்கதேச எல்லை பாதுகாப்பு படை இடம் கோரிக்கைகளை அவ்வப்போது முன்வைத்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.