கடந்த புதன்கிழமை அன்று காலை நேரத்தில் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் அருகே உள்ள இந்தியா பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை பகுதி அருகே BSF – Border Security Force அதாவது எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான நடமாட்டத்தை உணர்ந்தனர்.
இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தன்னை பார்த்ததை உணர்ந்த அந்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விரட்டி சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் விசாரித்த போது அந்த நபர் பாகிஸ்தான் குடிமகன் என்பதும் வெறும் 15 வயது நிரம்பிய சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அந்த சிறுவனை தங்களது முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னர் அதாவது செவ்வாய்க்கிழமை அன்று இதே பஞ்சாப் மாநிலத்தில் அபோகார் செக்டார் பகுதியில் அமைந்துள்ள சாத்கி எல்லை காவல் சாவடி அருகே சர்வதேச எல்லையை கடக்கும் வேண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானிய நபரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
அதாவது ஜூலை ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவம் என்ற அந்த பாகிஸ்தானின் நபரை கண்காணிப்பு பணியில் இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கண்டு பலமுறை இந்திய எல்லைக்குள் ஊடுருவ வேண்டாம் என எச்சரித்தும் அந்த நபர் அத்துமீறி நுழைந்த காரணத்தால் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மூன்று முறை சுட்டதில் அந்த நபர் உயிர் இழந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.