கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அன்று ஈரானுடைய ஆதரவு பெற்ற ஏமன் நாட்டை சேர்ந்த ஹூத்தி பயங்கரவாத குழுவினர் இஸ்ரேலின் முன்னாள் தலைநகர் மற்றும் இஸ்ரேலின் மிகப்பெரிய நகரமான டெல் அவிவை நோக்கி ஏவிய ஈரானிய தயாரிப்பு மேம்படுத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் டிரோன் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது மோதி வெடித்ததில் சில மாதங்களுக்கு முன்பு பெலாரஸ் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்த யூதர் எவ்கெனி பெஃர்டர் எனும் 50 வயது இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஹூத்தி பயங்கரவாத குழுவினர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளில் இந்த தாக்குதல் ஒரு புதிய அத்தியாயம் என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த தாக்குதல் பற்றி செய்த அறிக்கை வெளியிட்ட இஸ்ரேலிய ராணுவம் இந்த ட்ரோனை முன்னரே கண்டறிந்ததாகவும் ஆனால் ஏதோ மனித தவறு காரணமாக சுட்டு வீழ்த்த முடியாமல் போனது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னால் டெல் அவிவ் நகரத்தை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அந்த நகரத்தை சென்றடைவதற்கு முன்னரே விட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பிறகு கூடிய உயிர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரேலிய ராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்கள் இனியும் பொறுமை காப்பது சரியாகாது என வலியுறுத்தியதாகவும் இதைத்தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவாவீ கேல்லன்ட் ஆகியோர் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஏமன் நாட்டை சேர்ந்த ஹூத்தி பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து இஸ்ரேலிய விமானப்படை இஸ்ரேலில் இருந்து சுமார் 1800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏமன் நாட்டின் துறைமுகமான ஹோதைதா மீது சவுதி அரசின் ஒப்புதலோடு அந்நாட்டு வான்வழி பறந்து சென்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தனது வரலாற்றில் நடத்தியுள்ள நீண்ட தூர விமானப்படை தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நடவடிக்கைக்கு Operation Outstretched Arm என பெயரிடப்பட்டது என இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த தாக்குதல் பற்றி நாட்டு மக்களுக்கு காணொளி மூலமாக அறிவிப்பு விடுத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ ஏமன் மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களில் பயன்படுத்தும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவை அனைத்தும் இந்த துறைமுகம் வழியாகத்தான் அவர்களின் கைகளுக்கு சென்றடைகிறது எனவும் இவற்றைக் கொண்டு இஸ்ரேல் மட்டுமின்றி ஈரானுக்கு எதிரான அந்த பிராந்தியத்தை சேர்ந்த மற்ற நாடுகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது எனவும் அமெரிக்க தலைமையிலான கடற்படை நடவடிக்கைகள் இந்தத் துறைமுகம் பொது நடவடிக்கைகளுக்கும் பயன்படுவதால் அதற்கு எதிராக நடத்தப்படவில்லை எனவும் ஆகவே தான் இஸ்ரேல் ஹோதைதா துறைமுகத்தை இலக்காக தேர்வு செய்தது எனவும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை இஸ்ரேல் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர் காலி பஹாரா மியரா இந்த சிறிய தாக்குதல் ஒரு மிகப்பெரிய போராக உருவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளதால் அமைச்சரவை இந்த தாக்குதலுக்கு முறையான அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்க அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் மேலும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக அமெரிக்க அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் மேலும் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் தகவல் தெரிவித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் பற்றி செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள ஹூத்தி பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் எண்ணெயக் கிடங்குகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை தாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வெளியாகியுள்ள காணொளிகளில் ஹொதைதா துறைமுகம் முழுவதும் தீ பற்றி எரிவது மற்றும் கரும்புகை சூழ்ந்திருப்பதை காண முடிகிறது.
மேலும் ஹூத்தி பயங்கரவாதிகளின் செய்தி தொடர்பாளர் மொஹமது அப்துல் சலாம் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலடி கொடுப்போம் எனவும் இந்த தாக்குதல் நடத்தியதன் மூலம் காசா மக்களுக்கு ஆதரவான எங்கள் நடவடிக்கைகளை அச்சுறுத்தி முடக்கலாம் என இஸ்ரேல் நினைக்கிறது அது ஒருபோதும் நடைபெறாது எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த அமைப்பின் அரசியல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி விரைவில் கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பயங்கரவாத குழுவினர் ஏற்கனவே இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது செங்கடல் வழியாக செல்லும் போது தாக்குதல்கள் நடத்தி வந்தனர். தொடர்ந்து இஸ்ரேலுடன் தொடர்பே இல்லாத இந்திய அமெரிக்க இங்கிலாந்து ஜப்பானிய ரஷ்ய கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக இஸ்ரேல் விமானப்படை என் மீது நேரடி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது இது பற்றி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறும் போது எங்கள் மீது 200க்கும் மேற்பட்ட முறை அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் முதல் முறையாக ஒரு இஸ்ரேலிய குடிமகன் கொல்லப்பட்டுள்ளார் நாங்களும் உடனடி பதில் தாக்குதல் நடத்தினோம் இனியும் எதிர்காலத்தில் எங்கு எப்போது தேவைப்பட்டாலும் இதை நாங்கள் செய்வோம் என கூறியுள்ளார். இஸ்ரேலிய பிரதமரும் எங்களை தாக்க நினைக்கும் யார் மீதும் நாங்கள் தயங்காமல் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஈரானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதாவது மேல்குறிப்பிடப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளான ஏமனுடைய ஹொதைதா துறைமுகம் இஸ்ரேலில் இருந்து 1800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அதே நேரத்தில் ஈரானிய தலைநகர் டெஹ்ரான் இஸ்ரேலில் இருந்து வெறுமனே 1600 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது மேலும் பல ஈரானிய பகுதிகள் மற்றும் நகரங்கள் டெஹ்ரானுக்கு முன்னரே அமைந்துள்ளன ஆகவே இஸ்ரேலால் ஈரானிய தலைநகர் மற்றும் அதற்கு முன் உள்ள நகரங்கள் மற்றும் தலைநகரை தாண்டிய பகுதிகளையும் எளிதாக தாக்க முடியும் என்பது நிருபணமாகி உள்ளது ஈரானுக்கு கெட்ட செய்தியாக மாறி உள்ளது கூடுதல் சிறப்புமிக்க தகவல் ஆகும்.