புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் : அணுசக்தி துறைக்கு அளிக்கப்பட்டுள்ள நிதி ஒரு பார்வை !!

2024 – 2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அணுசக்தி துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பலரால் கவனிக்கப்படாமல் போனாலும் அது மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது என்பதை உண்மை. அந்த வகையில் இந்திய அணுசக்தி துறைக்கு எந்தெந்த வகையில் எந்தெந்த விதமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த கட்டுரை விளக்க உள்ளது.

அதாவது பட்ஜெட் தாக்கல் என்பது இந்திய அணு சக்தி துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து பேசும் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத சுத்தமான மின்சக்தியை உற்பத்தி செய்வதில் நிலவும் பிரச்சனைகளை சமாளிக்க ஒரு சிறிய முடிவை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்தார். அதாவது இந்தியா முழுவதும் சிறிய அளவிலான அணு உலைகள் அமைக்கப்படும் இவை Bharat Small Reactors என அழைக்கப்பட உள்ளன.

பல பத்தாண்டுகளாக இந்தியாவில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு அணுமின் நிலையங்கள் அமைக்க நிலவும் எதிர்ப்பு நமக்குத் தெரிந்தது. ஆனால் தற்போதைய உலக சுற்றுச்சூழல் மாசு காரணமாக சுத்தமான சுற்றுச் சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த சிறிய வகை அணு மின் நிலையங்கள் புதிய பேஷனாகி வருகின்றன. உலக நாடுகள் உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஏற்படும் தீய விளைவுகள் குறித்து அச்சமடைந்து கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சுத்தமான சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஆபத்து ஏற்படுத்தாத முறையில் மின் சக்தியை தயாரிப்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் நீர் நிலம் காற்று சூரிய ஒளி ஆகியவை சார்ந்த மின் உற்பத்தி ஆலைகள் உலகெங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இவை எல்லாவற்றையும் காட்டிலும் மேலும் நிலக்கரி பெட்ரோலியம் சார்ந்த மின் உற்பத்தி அமைப்புகளை காட்டிலும் குறைந்த செலவில் அதிக அளவில் மின் உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட அணுமின் நிலையங்கள் ஒரு பிரச்சனைக்குரிய குழப்பத்திற்குரிய விஷயமாகவே நீடித்து வருகின்றன. குறிப்பாக இந்த அணுமின் நிலையங்கள் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் ஏற்படுத்தும் சேதங்கள் மற்றும் அணு உலை கழிவுகள் ஆகியவை சார்ந்த கவலைகள் உலகெங்கும் நிலவுகின்றன. மேலும் இந்த அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு மிக அதிக அளவில் இடம் பணம் நேரம் ஆகியவை தேவைப்படுகிறது.

இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக SNR – Small Nuclear Reactor அதாவது சிறு அணு உலைகள் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் இவற்றை மிக எளிதாக மிக சுலபமாக மிக வேகமாக மிகவும் சிறிய இடத்தில் நிறுவ முடியும். மேலும் இவற்றிலிருந்து வெளியே வரும் கழிவுகள் மிக மிகக் குறைந்த அளவாக தான் இருக்கும். ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து போன்ற விபத்துக்கள் இந்த சிறிய அணு உலைகளில் நடக்க வாய்ப்பில்லை. கதிர்வீச்சு போன்ற பிரச்சினைகளும் இவற்றில் இருந்து ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இவற்றில் ஒவ்வொன்றும் அதிகபட்சமாக தல 300 மெகாவாட் மின் சக்தி வரை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டவை ஆகும்.

இந்தியாவின் தற்போதைய அணு மின் உற்பத்தி திறன் 6780 மெகாவாட் ஆகும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறனில் வெறும் மூன்று சதவீதமாகும். வருகிற 2031 ஆம் ஆண்டுக்குள் இன்னும் 21 புதிய அணுமின் நிலையங்கள் அமைத்து ஒட்டுமொத்த அணுமின் உற்பத்தியை 15700 மெகாவாட் ஆக அதிகரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மின்சக்தி பாதுகாப்பிற்கு இந்த நடவடிக்கை மிகவும் இன்றி அமையாது என இந்திய அரசு நம்புவதால் 2031 ஆம் ஆண்டிற்குள் அனுமின் உற்பத்தி சுமார் மூன்று மடங்காக அதிகரிக்க கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வருகிற 2030 ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தி திறனை சுமார் 500 ஜிகாவாட் ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தி திறன் 190 ஜிகாவாட் ஆகும். மேல் குறிப்பிடப்பட்ட இலக்கை சாத்தியமாக இந்திய அரசு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு 50 ஜிகாவாட் அளவிற்காவது புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் இந்த இலக்கை அடைவதற்கு மேலே குறிப்பிடப்பட்ட சிறிய அணு உலைகள் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்றால் மிகை ஆகாது.