இந்தியாவின் மூன்றாவது தலைமுறை அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான கட்டுமானங்களும் தயார் !!

கொச்சி கப்பல் கட்டுமான தளத்தை சுற்றி உள்ள பகுதிகளை சமீபத்தில் செயற்கைக்கோள் வழியாக புகைப்படங்கள் எடுத்த போது அதில் ஒரு முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது. அதாவது இந்தியாவின் மூன்றாவது தலைமுறை அணுசக்தி அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கிகள் கப்பல்கள் கட்டுவதற்கான பிரம்மாண்டமான கட்டுமான தளம் தயாராகி உள்ளது. இந்த புதிய கட்டுமான தளம் CSL – Cochin Shipyards Limited கொச்சி கப்பல் கட்டுமான தளத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இந்த கட்டுமான தளத்தில் S5 எஸ் பி ரகத்தை சேர்ந்த மூன்றாவது தலைமுறை அதிக நவீன அணுசக்தியால் இயங்கக்கூடிய அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே கட்டப்படும் என தற்போது பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 600 மீட்டர் நீளம் கொண்ட இந்த கட்டுமான தளம் ஒரே நேரத்தில் S5 ரகத்தைச் சேர்ந்த மூன்று SSBN – Sub Surface Ballistic Nuclear அதாவது அணுசக்தியால் இயங்கக்கூடிய அணு ஆயுத தாக்குதல் நீர் மூழ்கி கப்பல்களை கட்டும் அளவிற்கு பிரமாண்டமானதாகும். இங்கு அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்த பிறகு நீர் மூழ்கி கப்பல்கள் நீருக்குள் இறக்கப்பட்டு மற்ற வேலைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் லட்சிய கனவு திட்டங்களில் ஒன்றான முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்கள் இந்த கட்டுமான தளத்தின் மூலமாக நிறைவேற உள்ளது.

மேலும் S5 நீர்மூழ்கி கப்பல்கள் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ தளவாட தயாரிப்பு துறையின் திறன்களுக்கு மிகப்பெரிய சான்றாகும். இது சுதேசி ஆயுத தயாரிப்பில் இந்தியா முன்னேறுவதற்கான அடையாளமாகும் மற்றும் ஆயுத தயாரிப்பில் தன்னிறைவு பெறுவதையும் இது உறுதி செய்யும். மேலும் மேற்குறிப்பிட்ட S5 ரக நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவின் கடலடி தாக்குதல் மற்றும் தடுப்பு திறன்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றால் மிகை ஆகாது.

இந்த S5 அணுசக்தி நீர்மூழ்கியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் பிரம்மாண்டமானவையாகும். இவை ரஷ்யாவின் டெல்டா ரக அணு சக்தி நீர்மூழ்கியில் இருக்கக்கூடிய அணு ஆயுத தாக்குதல் நீர் மூழ்கி கப்பல்களை விடவும் அதேபோல் சீனாவின் Type 094 ரக அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை விட பெரியதாகவும் பிரான்ஸ் கடற் படையின் Triomphant அணுசக்தியால் எங்கும் அனு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை விட பெரியதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இங்கிலாந்தின் Vanguard, அமெரிக்காவின் Ohio மற்றும் Columbia மற்றும் ரஷ்யாவின் Borei ரக அணுசக்தியால் இருக்கக்கூடிய அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை விடவும் சிறியதாகும்.

மேற்குறிப்பிட்ட S5 ரக நீர்மூழ்கி கப்பல்களில் K5 மற்றும் K6 SLBM – Submarine Launched Ballistic Missiles அதாவது நீர் மூழ்கியிலிருந்து ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணைகள் இணைக்கப்படும். இவை சுமார் ஐந்தாயிரம் முதல் 8000 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணித்து இலக்குகளை துல்லியமாக தாக்கி அளிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் ஆகும். ஆகவே இந்த நீர் மூழ்கி கப்பல்கள் மூலமாக இந்தியா எதிரி நாடுகள் மீது தேவைப்படும் பட்சத்தில் யாருக்கும் தெரியாத படி கடலுக்கு அடியில் எங்கிருந்தோ பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு அணு ஆயுத தாக்குதல்கள் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது முப்பரிமாண அணு ஆயுத தாக்குதல் திறன்களையும் அணுஆயுத தாக்குதல் பதிலடி திறன்களையும் அணு ஆயுத தாக்குதல் பலத்தையும் பன்மடங்கு அதிகரிக்கிறது என்பது கூடுதல் சிறப்பாகும்.

உலகில் அமெரிக்கா ரஷ்யா இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் சீனா மட்டுமே சொந்தமாக உள்நாட்டிலேயே இத்தகைய அணுசக்தியால் இயங்கக்கூடிய அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைத்து கட்டமைத்து படையில் இணைத்து பயன்படுத்திய வரலாறு கொண்டவையாக இருந்த நிலையில் தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் வருகிற 2035 ஆம் ஆண்டு வாக்கில் சேர உள்ளது. மேற்குறிப்பிட்ட S5 நீர் மூழ்கி கப்பல்களில் முதல் நீர் மூழ்கி கப்பலானது வருகிற 2035 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய கடற்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புதிய கட்டுமான தளம் அதற்குப் பிறகு அடுத்தடுத்து இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தொடர்ந்து உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க பெரும் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.