கொள்ளையனாக மாறிய முன்னாள் ராணுவ காவலர் கைது !!
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பெங்களூருவின் தெற்கு பகுதியில் கொல்லை முயற்சியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தரை படை ராணுவ காவலர் ஒருவரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட கடன் சுமை காரணமாக கொள்ளை முயற்சிகளில் ஈடுபட முடிவு செய்ததாக தெரியவந்துள்ளது.
தெற்கு பெங்களூரின் ககாதியா நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதி ஓய்வு பெற்ற ராணுவ வீரரான வினய் குமார் ஆன்லைனில் தான் வாங்கிய ஏர் கண்ணை கொண்டு சென்று அந்த வீட்டில் வசித்து வந்த பெண்மணியை மிரட்டி அவரது தலையில் அந்த துப்பாக்கியால் அடித்து அவரது கழுத்தில் இருந்த தங்க மாங்கல்ய செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதற்கிடையே அந்தப் பெண் இட்ட கூச்சலை கேட்ட பக்கத்து வீட்டு நபர் உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண்ணில் அழைத்து இந்த சம்பவத்தை பற்றி தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அச்சுகுட்டு மற்றும் சுப்பிரமணியபுர காவல் நிலைய ரோந்து குழுவினர் வினய் குமாரை பிடிக்கும் முயற்சிகளில் இறங்கினர். சற்று நேரத்தில் சுப்பிரமணியபுர காவல் நிலையம் வந்து குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் வினய்குமாரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதை எடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்த போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஓய்வு பெற்றதும் அதற்கு பிறகு பல்வேறு தொழில் முயற்சிகள் தொடர்பாக பல்வேறு முதலீடுகள் செய்து அவற்றில் நஷ்டமடைந்ததாகவும் அந்த வகையில் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை கடன் சுமை ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அந்தக் கடனை திருப்பிக் கொடுப்பதற்கு கொள்ளை முயற்சிகளில் ஈடுபட முடிவு செய்ததாகவும் ஓய்வு பெற்ற ராணுவ காவலரான வினய் குமார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
40 வயதான வினய்குமார் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இவர் பெங்களூருவில் வசிக்கும் தனது சகோதரியை பார்க்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம். எனது சகோதரி வசிக்கும் வீட்டில் தரைதளத்தில் அந்த வீட்டின் உரிமையாளரான பெண்மணி வசித்து வந்துள்ளார். அவரிடம் தான் வினய் குமார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீட்டிற்கு பிளம்பர் என்ற போர்வையில் சென்று தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான வினய் குமாரிடமிருந்து காவல்துறையினர் சுமார் 5.50 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட 73 கிராம் செயினை மீட்டுள்ளனர் மேலும் அவர் மீது இதற்கு முன்பு எந்த வழக்குகளோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டதற்கான சரித்திரமோ இல்லை என காவல்துறையினர் ஊடகத்தின் மூலம் தெரிவித்துள்ளனர். கைதான ஓய்வு பெற்ற ராணுவ வீரரான குமாரின் மனைவி மற்றும் பிள்ளைகள் சித்தூரில் வசித்து வருகின்றனர். மேலும் அவரை பதினாறாம் தேதி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்திய போது நீதிபதி நீதிமன்ற காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.