இங்கிலாந்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழிலாளர் கட்சி அரசு சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறிய அல்லது நுழைந்தவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும் என இங்கிலாந்து உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி இருக்கும்போது ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைந்தவர்களை வருவாண்டா நாட்டிற்கு நாடு கடத்துவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக அன்று எதிர் கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறிய பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான திட்டத்தை பாராளுமன்றத்தில் முன் வைத்தது.
தற்போது தொழிலாளர் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக புதியதாக Border Security Command எல்லை பாதுகாப்பு கட்டளையகம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது இதன் தலைவர் இங்கிலாந்து உள்துறை அமைச்சருக்கு நேரடியாக பதில் அளிக்க வேண்டும். இந்த அமைப்பின் பணியானது இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை கணக்கெடுத்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.
உள்நாட்டு கலவரங்கள் உள்நாட்டு யுத்தம் மதப் பிரச்சினைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான சூழல்கள் நிலவும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இதில் விளக்கு அளிக்கப்படும் ஆனால் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் நாடுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஸ்திரமான ஆட்சி அதிகாரமும் பாதுகாப்பான சூழலும் நிலவும் பட்சத்தில் அத்தகைய நாடுகளை சேர்ந்தோர் திரும்ப அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது பிரச்சனைக்குரிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் இங்கிலாந்தில் வசிக்க அடைக்கலமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் உடனடியாக அங்கீகரிக்கப்படுகிறது எனவும் ஆனால் அதே வேளையில் அமைதியான சூழல்கள் நிலவு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நுழைந்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் வியட்நாம் போன்ற தெற்காசிய நாடுகள் சிலவும் அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாடுகளை சேர்ந்த சட்ட விரோதமாக குடியேறிய அனைவரும் இனி வரும் காலங்களில் மிக வேகமாக அடையாளப்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு சட்ட ரீதியாக அதாவது சர்வதேச விதிகள் மற்றும் இருதரப்பு உறவுகள் சார்ந்த ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேல் குறிப்பிடப்பட்ட புதிய எல்லை பாதுகாப்பு கட்டளையாகும் சர்வதேச காவல்துறை ஐரோப்பிய காவல்துறை இங்கிலாந்து காவல்துறை இங்கிலாந்து குடியுரிமை துறை மற்றும் உளவுத்துறைகளுடன் இணைந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் விவரங்களை சேகரித்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறப்பு சட்டங்கள் இளம் அதிகாரம் அளிக்கப்படும் எனவும,
அந்தப் பணிகள் இங்கிலாந்து உள்துறை அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து முழுவதும் அழகு துறை வாகன பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகளில் இத்தகைய சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறைந்த ஊதியம் கொடுத்தால் போதுமானது என்பதால் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இப்படி வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.