பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை அழிக்க 500 சிறப்புப்படை வீரர்களை களம் இறக்கும் இந்திய தரைப்படை !!

ஜம்மு பிராந்தியத்தில் 50-க்கும் அதிகமான சிறப்பு பயிற்சி பெற்ற பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள நிலையில் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலும் அங்கு நிலை வரும் பாதுகாப்புச் சூழலின் அடிப்படையிலும் இந்திய தரைப்படை ஜம்மு பிராந்தியத்தில் தனது படையணிகளின் செயல்பாடுகளை அந்த தேவைகளும் சூழல்களுக்கும் ஏற்ப மாற்றி அமைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் மற்றும் இந்திய தரைப்படை தலைமையக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்களை மீண்டும் உயிர்பிக்க பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி பெற்ற 50 முதல் 55 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு ஊடுருவி உள்ளதாகவும் இதைத்தொடர்ந்து அந்த பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை வீழ்த்துவதற்காக இந்திய தரைப்படை சுமார் 500 பாரா சிறப்பு படை கமாண்டோ வீரர்களை பல்வேறு குழுக்களாக ஆங்காங்கே களமிறக்கி உள்ளதாக ANI ஊடகத்திற்கு இந்திய தரைப்படை அதிகாரிகள் அளித்த செய்தியில் கூறியுள்ளனர்.

இந்திய உள்நாட்டு உளவுத்துறை இந்திய வெளிநாட்டு உளவுத்துறை மற்றும் இந்திய தரைப்படை உளவுத்துறை ஆகியவையும் தங்களது செயல்பாடுகளை இந்த ஜம்மு பிராந்தியத்தில் பல மடங்காக அதிகரித்துள்ளன. இந்த அமைப்புகள் ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இயங்குவோர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான பகுதிகள் ஆகியவற்றை கண்டறியும் பணிகளை துவக்கியுள்ளனர். மேலும் இந்திய தரைப்படை ஒரு பிரிகேட் அதாவது 3500 முதல் 4000 வீரர்கள் வரையிலான படைப்பிரிவை இந்த பகுதியில் களம் இறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் ராணுவ அதிகாரிகள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு கருவிகளை பெற்றுள்ள இந்த பயங்கரவாதிகளை படைகள் கண்டறிந்து அழிக்க உதவியாக யுத்ததந்திரங்களே வகுத்து வருவதாகவும் ஏற்கனவே இந்த பகுதிகளில் இந்திய தரைப்படையின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப்படையான ராஷ்டிரிய ரைஃபில்ஸ் படையின் ரோமியோ மற்றும் டெல்டா படை பிரிவுகளும் வேறு சில காலாட்படை பிரிவுகளும் இயங்கி வருவதாக தெரிவித்தது கூடுதல் தகவலாகும்.