அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இஸ்யேலிய பாதுகாப்பு தொழில்துறையை சேர்ந்த தனியார் நிறுவனமான Uvision Air Ltd இந்தியாவில் உள்ள முன்னணி அலைச்சல் குண்டுகளை Loitering Munitions தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது இந்திய விமானப்படைக்கு தனது Hero – 120 ரக அலைச்சல் குண்டுகளை அளிக்க முன் வந்துள்ளது. அதாவது இந்த வகை குண்டுகளை இந்திய விமானப்படையில் உள்ள ரஷ்ய தயாரிப்பு மி 17 வெர்ஷன் 5 Mi-17V5 மற்றும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட துரு ஹெலிகாப்டரின் தாக்குதல் வடிவமான ALH RUDRA ருத்ர ஆகியவற்றில் இணைத்து பயன்படுத்த இந்திய விமானப்படைக்கு மேற்குறிப்பிட்ட நிறுவனம் ஹீரோ 120 ரக குண்டுகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட ஹீரோ 120 ரக குண்டுகள் டாங்கி எதிர்ப்பு மற்றும் எதிரி வீரர்கள் எதிர்ப்பு ஆகிய பணிகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன மேலும் இந்த வகை குண்டுகள் ஒரு நடுத்தர தாக்குதல் வரம்பு கொண்ட குண்டுகளாகும். அது தவிர பல வகை நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையிலான வெடி மருந்துகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை ஆகையால் போர்க்களத்தில் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறனையும் படைகளுக்கு அளிக்கின்றன.
Uvision யூவிஷன் நிறுவனமானது மேற்குறிப்பிட்ட ஹீரோ-120 Hero-120 ரக குண்டுகளை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி அவற்றில் வெற்றி கொண்டுள்ளதாகவும் அந்த சோதனைகளில் மேற்குறிப்பிட்ட குண்டுகள் மிக மிக சிறப்பாக செயல்பட்டு உள்ளதாகவும் அதாவது கடும் குளிர் கடும் பனிப்பொழிவு கடும் வெப்பம் கடுமையான மழை கடுமையான காற்று மற்றும் பார்க்கவே முடியாத சூழல்களில் குறிப்பாக இரவு மற்றும் பகல் நேரங்களில் கூட ஹீரோ 120 ரக குண்டு மிகச் சிறப்பாக தனது திறன்களை வெளிப்படுத்தி இலக்குகளை வெற்றிகரமாகவும் துல்லியமாகவும் தாக்கி அழித்ததாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது மேற்குறிப்பிட்ட ஹீரோ 120 இந்திய விமானப்படையின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக மாற்றியுள்ளது என்றால் மிகை அல்ல.
Uvision Air Limited நிறுவனமானது இந்தியாவில் Avision என்கிற பெயரில் ஒரு துணை நிறுவனத்தை ஆரம்பித்து இந்தியாவிலேயே தனது ஆயுதங்களை தயாரிப்பது பராமரிப்பது மற்றும் தரம் உயர்த்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது ஒரு கூட்டு தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஆயுதங்கள் இந்திய முப்படைகள் மற்றும் துணை ராணுவ படைகளின் தேவைகளை சந்திக்கும் வகையில் சிறப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய மாறிவரும் காலகட்டத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மிக மிக இன்றியமையாததாக மாறி வருகின்றன ஆகவே அத்தகைய சூழல்களை சந்திக்க தயாராக இருக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட நிறுவனமானது இந்திய விமானப்படைக்கு தொடர்ந்து மேற்குறிப்பிட்ட வகையிலான குண்டுகளின் தேவை பற்றி வலியுறுத்தி வருகிறது மேலும் அவற்றால் இந்திய படைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது எப்படியோ இந்திய விமானப்படை இந்த ஒப்பந்தத்தை பற்றி இனிதான் இறுதி முடிவெடுக்கும் என இந்திய விமானப்படை தலைமையாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.