திரவநிலை கண்ணிவெடிகள் காஷ்மீரில் புதிய ஆபத்து !!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரவ நிலை குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிறவகை வெடிகுண்டுகளைப் போல் அல்லாமல் இந்த வகை வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகும் மேலும் இந்த வகை வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் Difficult to detect D2d என வகைப்படுத்துகின்றனர். இவை சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மாத ஆரம்பத்தில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் லஷ்கரி துவ்பா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களும் பயங்கரவாதிகளும் ஆன சத்தார் எனப்படும் ரியாஸ் தார் மற்றும் ரயீஸ் தார் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு உதவியாக இருந்த Overground worker OGW அதாவது பயங்கரவாத உதவியாளர் ஒருவன் கைது செய்யப்பட்டான் அவனது உதவியுடன் தான் தற்போது இந்த திரவ நிலை குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதாவது மேற்குறிப்பிட்ட என்கவுண்டிற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் காவல்துறை லஷ்கர் துவைப்பா இயக்கத்திற்காக பணிபுரிந்து வந்த பயங்கரவாத உதவியாளர்களை தேடித் தேடி கைது செய்து கடும் நடவடிக்கைகளை எடுத்தது அப்படி கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவன் விசாரணையின் போது புல்வாமா பகுதியில் உள்ள நிகாமா என்னும் கிராமத்தை சேர்ந்த சஜ்ஜத் கானி, பிலால் அகமது லோன் மற்றும் ஸகீர் பஷீர் எனப்படும் மூவரும் பயங்கரவாதிகளுக்கு உணவு இருப்பிடம் சப்ளை ஆகியவற்றை வழங்கி உதவியதாக தெரிவித்தான்.
மேலும் விசாரணையின் போது அவன் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கரி துவா பயங்கரவாதிகளும் திரவநிலை கண்ணிவெடிகளை தயார் செய்து வைத்திருந்ததாகவும் அவற்றை பஷீர் பூந்தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தான். இதைத் தொடர்ந்து இந்திய தரப்பைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ராணுவ குண்டுகள் செயலிழப்பு நிபுணர்கள் குறிப்பிட்ட பூந்தோட்டத்திற்கு விரைந்து சென்று திரவ நிலை கன்னிவெடிகளை கண்டுபிடித்து அவற்றை பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் அடைத்து செயலிழக்க செய்யும்படி கொண்டு சென்றனர். இந்த திரவ நிலை குண்டுகளின் எடை சுமார் 6 கிலோ வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு படை அதிகாரிகள் நமக்கு அளிக்கும் தகவலின் படி இந்த வகை குண்டுகளை மோப்ப நாய்களாலோ அல்லது வழக்கமான குண்டுவெடிப்பு கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது ஆகவே இவற்றை கண்டுபிடிப்பது மிக மிக கடினமானது மேலும் இந்த காரணத்தால் இவை மிக ஆபத்தானவையாகவும் கருதப்படுகின்றன. கடைசியாக இந்த வகை குண்டுகள் தெற்கு கஷ்மீரில் கடந்த 2007ஆம் ஆண்டில் உபயோகிக்கப்பட்டன அதன்பிறகு இவற்றின் உபயோகம் காஷ்மீரில் இல்லாமல் இருந்தது.
தற்போது இந்த திரவ நிலை குண்டுகளின் மீள் வருகை காஷ்மீரின் பாதுகாப்பு கால நிலவரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் பயங்கரவாதிகள் திரவ நிலை குண்டுகளை பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்திருந்ததாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு பகுதியில் உள்ள இந்தியா பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லையோரம் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் பாகிஸ்தான் ட்ரோன்கள் வீசி சென்ற திரவ நிலை குண்டு வேலை செய்ய பயன்படுத்தப்படும் மூன்று வெள்ளை திரவங்கள் அடங்கிய பாட்டில்களை கண்டெடுத்து பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர் ஆய்வில் இவை நைட்ரோலிசரின் அல்லது டிஎன்டி எனப்படும் குண்டுகளில் பயன்படுத்தப்படும் திரவங்கள் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
இதே முறையில் தற்போதும் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலமாக திரவ நிலை வெடிகுண்டுகள் செய்ய தேவையான மூலப்பொருட்கள் வீசி செல்லப்பட்டு அவற்றை கொண்டு பயங்கரவாதிகள் திரவ நிலை கண்ணுவெடிகளை தயாரித்திருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். இதில் குறிப்பாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI சமீப காலமாக காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்களான லஸ்கர் இ தோய்பா, ஹிஸ்பல் முஜாஹிதீன் மற்றும் ஜெய் ஸ் இ முகமது ஆகிய இயக்கங்களுக்கு ட்ரோன்கள் மூலமாக உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.