பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பிரம்மாஸ் திட்ட பொறியாளருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு !!
கடந்த 2018ஆம் ஆண்டு நிஷாந்த் அகர்வால் என்கிற பிரம்மாஸ் ஏவுகணை திட்டத்தில் பணியாற்றி வந்த பொறியாளர் பாகிஸ்தானுக்கு முக்கிய ரகசியங்களை பரிமாறியதாக கைது செய்யப்பட்டார் தற்போது அதாவது கடந்த திங்கட்கிழமை அன்று அவருக்கு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாக்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம் வி தேஷ்பாண்டே அவர் பிறப்பித்த உத்தரவில் நிஷாந்த் அகர்வால் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 235ஆவது பிரிவின் கீழும், தகவல் தொடர்பு சட்டத்தின் 66ஆவது பிரிவின் கீழும், அதிகாரப்பூர்வ ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் வரும் வேறு சில பிரிவுகளின் கீழும் குற்றம் சாட்டப்பட்டு அது நிருபிக்கவும் பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நீதிமன்றம் நிஷாந்த் அகர்வாலுக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளதாக சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜோதி வஜானி ஊடகங்களிடம் தெரிவித்தார் இந்த வழக்கு 2018ல் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது காரணம் பிரம்மாஸ் திட்டத்தில் நடைபெற்ற இத்தகைய முதல் சம்பவம் இது தான்.
இவர் DRDO வின் சிறந்த இளம் விஞ்ஞானி விருது பெற்றவர் ஆவார், முகநூலில் நேஹா ஷர்மா மற்றும் பூஜா ரஞ்சன் எனும் இரண்டு பேருடன் இவருக்கு அறிமுகமானது ஆனால் உண்மையில் இவை பாகிஸ்தான் உளவுத்துறையால் கையாளப்படும் போலி கணக்குகளாகும் ஆபாச உரையாடல் மூலமாக சிக்கிய அவர் பிரம்மாஸ் ஏவுகணைகள் பற்றிய தகவல்களை பாக உளவுத்துறையிடம் பரிமாறினார்.