குஜாரத்தில் கைது செய்யப்பட்ட 4 ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுபாட்டாளர் இலங்கையில் கைது !!

கடந்த மாதம் குஜராத் தலைநகர் அஹமதாபாத் நகரத்தில் இலங்கையில் இருந்து வந்திருந்த நான்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர் இதை தொடர்ந்து இவர்களை கட்டுபடுத்தும் நபர் பாகிஸ்தானில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இவர்களிடம் குஜராத் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர் இலங்கை அதிகாரிகளும் தங்களது நாட்டில் இலங்கை விசாரணைகளை மேற்கொண்டனர் இந்த நிலையில் இலங்கை காவல்துறையின் உளவுப்பிரிவு இவர்களின் கட்டுபாட்டாளரை கைது செய்துள்ளது.

ஒஸ்மான் புஷ்பராஜா ஜெரார்டு என்கிற அந்த நபருக்கு 46 வயதாகிறது இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை காவல்துறையின் குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டு உள்ளான் என இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார், இது தொடர்பான விசாரணையில் இலங்கை காவல்துறையின் இரண்டு முக்கிய உளவு பிரிவுகளான CID – Criminal Investigation Department குற்ற விசாரணை பிரிவு மற்றும் TID – Terrorist Investigation Department பரங்கரவாத விசாரணை பிரிவு ஆகியவை மற்றும் ராணுவ உளவு பிரிவுகள் உயர்மட்ட விசாரணைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை காவல்துறை ஒஸ்மான் தவிர மேலும் ஐந்து பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது, இவர்களில் ஒருவன் இந்தியாவில் கைதான நால்வரும் உறுதிமொழி எடுத்துகொள்ள பயன்படுத்திய ஐ.எஸ். கொடியை ஏற்பாடு செய்தவன், ஒருவன் நிதி ஆதாரங்களை கவனித்தவன் இருவர் இந்தியா வர வேண்டிய பயங்கரவாதிகள் பின்னர் கடைசி நேரத்தில் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு வேறு இருவர் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர், அப்படி இந்தியா அனுப்பி வைக்கப்பட்ட நான்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும் குஜராத் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவால் கடந்த மே 19ஆம் தேதி அஹமதாபாத் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கைதான நால்வர் பற்றிய கூடுதல் தகவல்களும் இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது அதாவது மொஹமது நூஸ்ரத் சிங்கப்பூர் துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார கருவிகளை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளான் இவன் மீது ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்கு ஒன்று உள்ளது.

மொஹமது நஃப்ரான் இந்தியா மற்றும் துபாயில் இருந்து சாக்லேட் மற்றும் துணிகளை இறக்குமதி செய்யும் தொழிலில் செய்து வந்துள்ளான் இவன் இலங்கை மாணிக்க கற்கள் மற்றும் நகைகள் ஆணைய சட்டத்தின் கீழ் ஒருமுறை கைதாகி உள்ளான் இவனது தந்தை பொட்டா நவ்ஃபர் ஒரு மிகப்பெரிய நிழல் உலக போதைப்பொருள் தாதா ஆவான் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை கொன்ற வழக்கில் தூக்கிலடப்பட்டவன் ஆவான் மற்ற இருவரான மொஹமது ராஷ்தீன் மற்றும் மொஹமது பாரீஷ் ஆகியோர் பற்றிய கூடுதல் தகவல்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.