கடந்த 2021 ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய தரைப்படை மற்றும் சீன தரைப்படைக்கு இடையே நடந்த மோதல் பற்றிய மிக முக்கியமான அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அதாவது இந்திய தரப்படையை சேர்ந்த ஒரு மருத்துவ உதவி வீரரை சீன வீரர்கள் காயமடைந்த தங்கள் வீரர்களுக்கு சிகிச்சை அளித்திட கடத்திச்சென்று பின்னர் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றது தெரியவந்துள்ளது, இந்த தகவல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் ராகுல் சிங் மற்றும் இந்தியா டுடே இதழின் ஷிவ் ஆரூர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள India’s most Fearless 3 எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
Penguin random house என்னும் பதிப்பு நிலையத்தால் இந்த புத்தகம் பதிப்பு செய்யப்பட்டு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த புத்தகத்தில் கல்வான் மோதல் பற்றிய பல யாருக்கும் தெரியாத இதுவரை கேள்விப்பட்டிராத பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக கல்வான் மோதல் பற்றிய பல தகவல்களை முதலில் பங்கேற்று சண்டையிட்ட பதினாறாவது பீகார் ரெஜிமென்ட்டை சேர்ந்த வீரர்கள் நேரடியாக தெரிவித்துள்ளனர். அதில் ஒன்றுதான் இந்திய மருத்துவ வீரரை கடத்தி சென்று சீனர்கள் கொண்ட இந்த கதை.
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நாயர் தீபக்சிங் இந்திய தரைப்படையின் Army medical Corps அதாவது தரைப்படை மருத்துவ பிரிவு படையில் நாயக் என்னும் அந்தஸ்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கள்வான் மோதலின் போது சுமார் 30க்கும் மேற்பட்ட காயமடைந்த இந்திய வீரர்களுக்கு களத்திலேயே மருத்துவ உதவி அளித்து காப்பாற்றி உள்ளார். அதே நேரத்தில் காயமடைந்த சீன வீரர்களுக்கும் தன்னால் இயன்ற மருத்துவ உதவிகளை அளித்து வந்தார். இதனை தற்போது பதினாறாவது பீஹார் ரெஜிமென்ட் படையணியின் கட்டளை அதிகாரியாக இருக்கும் கர்னல் ரவி காந்த் நாயக் தீபக் சிங் சிகிச்சை அளித்த இந்திய வீரர்களின் எண்ணிக்கைகள் விவரங்கள் நம்மிடம் உள்ளன ஆனால் எத்தனை சீன வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார் என்பது பற்றிய விவரங்கள் நம்மிடம் இல்லை ஆனால் பல சீன வீரர்கள் இன்று உயிருடன் பிழைத்து இருப்பதற்கு அவர்கள் நாயக் தீபக்ஷிங்கிற்கு நன்றி சொல்லியாக வேண்டும் என தெரிவித்தார்.
நாயக் தீபக் சிங் காயமடைந்த வீரர்களுக்கு களத்தில் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே அவரை நோக்கி பெரிய பெரிய பாறாங்கற்களை உருட்டி சீன வீரர்கள் தாக்க முயன்றுள்ளனர். அப்படி உருட்டி விழுந்த ஒரு பாறாங்கல் உடைந்து அதிலிருந்து ஒரு சிறிய பாகம் தெறித்து நாயக் தீபக் சிங்கின் நெற்றியில் மோதி கடுமையான காயத்தை ஏற்படுத்தியது. தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வழிந்த பிறகும் தனது பணியை நிறுத்தாமல் தொடர்ந்து காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் நாயக் தீபக் சிங். இதைப் பார்த்த இந்திய தரைப்படை மேஜர் ஒருவர், ஒலிபெருக்கி மூலமாக சீன வீரர்களுக்கு நீங்கள் தாக்க முயல்வது ஒரு மருத்துவ உதவி வீரராகும் அதுவும் அவர் சீன வீரருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாக கோபமாக எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே சீன வீரர்கள் மோதலின் போது நாயக் தீபக்சிங்கை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அங்கு காயமடைந்த சீன தரப்பு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க அவரை கட்டாயப்படுத்தி சிகிச்சை அளிக்க வைத்துள்ளனர். அவரும் அந்தப் பணியை தனது கடமையாக கருதி செய்துள்ளார். இதன் பிறகு அவரை சீனர்கள் கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.
நாயக் தீபக் சிங் தனக்கு கடுமையான காயம் ஏற்பட்ட போதும் தன்னை எதிரிகள் தாக்க கடுமையாக முயற்சித்த சூழலிலும் தனது பணியில் இருந்து பின்வாங்காமல் எதிரிகளுக்கும் மருத்துவ உதவி அளித்து தனது கடமையை சிறப்புடன் செய்தமைக்காக இந்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு போர்க்கால விருதான வீர் சக்ராவை அவருக்கு வழங்கி கௌரவித்தது. இதனை ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அன்றைய ஜனாதிபதி திரு ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து நாயக் தீபக் சிங் அவருடைய மனைவி திருமதி ரேகா சிங் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இதற்குப் பிறகு திருமதி ரேகா சிங். இந்திய தரைப்படை உதவியுடன் அதிகாரிகளுக்கான தேர்வில் கலந்துகொண்டு அவர்கள் அளித்த பயிற்சியின் பலனாக இந்திய தரைப்படையில் அதிகாரியாக தேர்வு பெற்று சென்னை பல்லாவரம் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு செய்து தற்போது இந்திய தரைப்படையில் லெப்டினன்ட் அந்தஸ்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவரைப் பற்றி கூறும் போது ஒரு முறையேனும் எனது கணவர் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த கள்வான் பகுதிக்கு சென்று அந்த இடத்தை பார்க்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.