ரூத்ரம் – 2 ஏவுகணை சோதனை வெற்றி !!
1 min read

ரூத்ரம் – 2 ஏவுகணை சோதனை வெற்றி !!

கடந்த மே 29ஆம் தேதி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO – Defence Research & Development Organisation ஒடிசா மாநில கடலோர பகுதியில் இந்திய விமானப்படையின் Su-30MKI கனரக பல திறன் போர் விமானத்தில் இருந்து Rudram -2 ரூத்ரம்-2 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது.

இந்த ஏவுகணை சிறப்பாக புறப்பட்டு நல்ல முறை பயணித்து இலக்கை மிக மிக துல்லியமாக தாக்கி அழித்தது, ஒட்டுமொத்தத்தில் இந்த ஏவுகணை அனைத்து விதமான இலக்குகளையும் சிறப்பாக சந்தித்து சோதனையில் வெற்றி பெற்றுள்ளது ஏவுகணையின் உந்துசக்தி அமைப்பு, வழிகாட்டி மற்றும் கட்டுபாட்டு அமைப்புகள் சிறப்பாக இயங்கி உள்ளன.

இந்த சோதனையை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ரேடார்கள் மற்றும் கடற்படை கப்பல் ஆகியவற்றை கொண்டு கண்காணித்து தரவுகளை சேகரித்துள்ளனர், இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தால் நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ரூத்ரம் – 2 ஏவுகணை அடிப்படையில் ஒரு தரை தாக்குதல் ஏவுகணையாகும் இதில் இரண்டு வெவ்வேறு ரகங்கள் உள்ளன முதல் ரகம் எதிரிகளின் ரேடார்களை துல்லியமாக தாக்கி அழித்து எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலை குலைய செய்யும், இரண்டாவது வகை விமான ஒடுபாதை ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழித்து எதிரிகளின் ராணுவ நடவடிக்கைகளை முடக்க உதவும் திறன் கொண்டதாகும்.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையில் DRDO வின் பல்வேறு ஆய்வகங்கள் உருவாக்கிய அதிநவீன அமைப்புகளும் தொழில்நுட்பங்களும் கருவிகளும் உட்புகுத்தப்பட்டு உள்ளன இந்த ஏவுகணை இந்திய விமானப்படையின் திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என்றால் அது மிகையாகாது.

ஏவுகணையின் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு கூறியுள்ளார் மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் எக்ஸ் வலைதள கணக்குகளில் இந்திய விமானப்படைக்கும் DRDO வுக்கும் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

ரூத்ரம் ஏவுகணைகளில் 1,2,3 என மூன்று வகைகள் உள்ளன அவை முறையே 150, 350, 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அளிக்கக்கூடியவை ஆகும் இவற்றின் வேகமும் ஒவ்வொரு வகைக்கும் மாறுபடுகிறது மேலும் இவற்றின் ரகத்திற்கு ஏற்ப இவற்றின் அளவும் வெடிபொருளின் அளவும் எடையும் மாறுபடும் என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.