நேற்று காலை ஏமனுடைய ஹூத்தி ஆயுத குழுவினர் அமெரிக்காவின் MQ-9 REAPER எனப்படும் ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி உள்ளனர், இந்த சம்பவம் ஏமன் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மாரீப் மாகாணத்தில் நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீழ்த்தப்பட்ட இந்த கண்காணிப்பு ட்ரோனில் எந்த விதமான அடையாளங்களும் இல்லை என புகைப்படங்கள் மூலமாக அறிய முடிகிறது, ஹூத்திக்களுக்கு எதிரான ஏமன் அரசு தரப்பும் இது பற்றி ஒன்றும் கூறவில்லை அதே நேரத்தில், இது பற்றி பேசிய அமெரிக்க விமானப்படை அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் எந்த ஒரு ஆளில்லா விமானமும் வீழ்த்தப்படவில்லை என தெரிவித்தார்.
இதுவரை கடந்த ஆண்டு பிரச்சினை துவங்கியது முதல் ஹூத்தி பயங்கரவாத குழு ஆறு MQ-9 Reaper ரக ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை சுட்டு வீழ்த்தி உள்ளதாகவும் இந்த மாதம் மற்றுமே சுமார் மூன்று இத்தகைய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.