54 மில்லியன் டாலர் மதிப்பிலான கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தங்களை பெற்றுள்ள இந்திய நிறுவனம் !!
1 min read

54 மில்லியன் டாலர் மதிப்பிலான கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தங்களை பெற்றுள்ள இந்திய நிறுவனம் !!

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனமான GRSE – Garden Reach Shipbuilders & Engineers அதாவது கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த M/S Carsten Rehder Schiffsmakler & Reedrei GmbH & Co KG Germany எனப்படும் ஒரு கப்பல் நிறுவனத்திடம் இருந்து சுமார் 54 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கப்பல் கட்டுமான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது.

ஜெர்மனிய நிறுவனம் கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனத்திற்கு அளித்துள்ள ஒப்பந்தத்தின்படி தல 7500 கண்கள் எடை கொண்ட நான்கு பல உபயோக கப்பல்களை கட்டி டெலிவரி செய்ய வேண்டும் தவிர மேலும் நான்கு கப்பல்களுக்கான ஒப்பந்தமும் கிடைக்க வாய்ப்புள்ளது இவை அனைத்தையும் சுமார் 33 மாத காலகட்டத்திற்குள் இந்திய நிறுவனம் செய்து முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் நிபந்தனை ஆகும்.

ஒவ்வொரு கப்பலும் சுமார் 120 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலம் கொண்டவையாகும் மற்றும் இந்த கப்பல்கள் 6.75 மீட்டர் நீருக்கடியில் தாழும் தன்மை கொண்டதாகும். இந்த கப்பல்கள் ஒவ்வொன்றும் Bulk, General & Project சரக்குகளை சுமக்கும் திறன் கொண்டவை ஆகும். அதேபோல் சரக்கு கண்டெய்னர்களை சுமக்கும் தன்மை கொண்டவை ஆகும். இது தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட மிகப்பெரிய காற்றாலைகளின் விசிறிகளை அல்லது சிறகுகளையும் மேல் தளத்தில் சுமக்கும் திறன் கொண்டவையாக இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனமானது ஏற்கனவே இந்திய கப்பல் படை இந்திய கடலோர காவல் படை மற்றும் மாநில காவல் துறைகளின் கடலோர பாதுகாப்பு குழுமங்களுக்கு தேவையான பல முன்னணி போர்க்கப்பல்கள் ரவுண்டு காலங்கள் ரோந்து படகுகள் ஆகியவற்றை தயாரித்து வழங்கி வரும் நிறுவனம் ஆகும். இது தவிர பல்வேறு வெளிநாடுகளுக்கும் வணிகரீதியான கப்பல்களை கட்டமைத்து ஏற்றுமதி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.