உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த எத்விர் லிம்பு எனும் நேபாள நாட்டை சேர்ந்தவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது கடந்த ஃபெப்ரவரி மாதம் எத்விர் லிம்பு குடிபோதையில் அலகாபாத் விமானப்படை தளத்தில் அத்துமீற முயன்றுள்ளார் அப்போது அவர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அவரால் தளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களுடன் இந்தி தெரியாததால் பேச முடியவில்லை என்றும் அடையாள அட்டை தொலைந்து விட்டதாகவும் அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியது அதாவது ராணுவ தளங்களில் பிறர் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை தான் ஆனால் அதற்காக வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பலகைகளில் உள்ள வார்த்தை பயன்பாட்டை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும்
உதாரணமாக அத்துமீறி நுழைவோர் சுடப்படுவர் என்றும் அத்துமீறுவோர் கண்ட இடத்திலேயே சுடப்படுவர் என்றும் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் சரியில்லை என்பது எனது கருத்து பொதுமக்கள் குறிப்பாக இந்த வாரத்தைகள் குழந்தைகள் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் ஆகவே இதைவிட கடுமைத்தன்மை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.