பிஹாரில் சட்ட விரோதமாக நுழைந்த சீனர் கைது !!
1 min read

பிஹாரில் சட்ட விரோதமாக நுழைந்த சீனர் கைது !!

பிஹார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் நகரத்தில் சட்ட விரோதமாக தகுந்த ஆவணங்கள் இன்றி இருந்த 60 வயதான லீ ஜியாகி என்பவரை பிஹார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நபர் பிரம்மபுரா காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட பைரியா பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டார் இவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் வேறு சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இது தொடர்பாக மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தொடர்ந்து பிரம்மபுரா காவல்நிலையத்திற்கு அந்த நபரை கொண்டு சென்று விசாரணை நடத்திய போது நேபாள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரிய வந்தது ஆனால் லீ ஜியாகிக்கு ஆங்கிலம் சரியாக தெரியாத காரணத்தால் காவல்துறையினர் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது இதை தொடர்ந்து ஒரு சீன மொழி வல்லுனரை அழைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து லீ எப்படி முஸாஃபர்பூர் நகரம் வந்தார், எதற்காக வந்தார், யார் யார் உதவினார்கள் என்பது போன்றவற்றை விசாரித்து அறிந்து கொள்ள உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் தற்போது பிரம்மபுரா காவல்நிலையத்தில் அந்த நபர் வைக்கப்பட்டு உள்ளார், பிற உளவுத்துறை அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களும் விசாரணை நடத்த உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.