இந்திய எல்லையில் இருந்து வெறும் 150 கிலோமீட்டர் தூரத்தில் சீனாவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் !!
1 min read

இந்திய எல்லையில் இருந்து வெறும் 150 கிலோமீட்டர் தூரத்தில் சீனாவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் !!

கடந்த மே27ஆம் தேதி எடுக்கப்பட்ட சில செயற்கைகோள் புகைப்படங்கள் PLAAF – Peoples Liberation Army Air Force எனும் மக்கள் விடுதலை ராணுவ விமானப்படை அதாவது சீன விமானப்படை இந்திய எல்லையில் இருந்து வெறுமனே 150 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு திபெத்தில் அமைந்துள்ள ஷிகாட்ஸே விமானப்படை தளத்தில் சீனாவின் மிக மிக நவீனமான ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான J-20 போர் விமானங்களில் 6 நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது, இந்த புகைப்படங்களை உலகளாவிய ரீதியில் செயற்கைகோள் புகைப்படங்கள் எடுக்கும் All Source Analysis என்கிற நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த ஷிகாட்ஸே தளம் இந்திய விமானப்படையின் இரண்டாவது ரஃபேல் போர் விமான படையணி நிறுத்தப்பட்டுள்ள ஹஸிமாரா விமானப்படை தளத்தில் இருந்து வெறுமனே 290 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மேலும் ஷிகாட்ஸே தளத்தில் ஒரு KJ-500 AEW&CS Airborne Early Warning & Control System Aircraft அதாவது முன்னெச்சரிக்கை மற்றும் கட்டளை மைய விமானமும் நிறுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

பொதுவாக இந்த J20 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் கிழக்கு சீனாவிலும் தைவானுக்கு அருகேயுள்ள பகுதிகளிலும் தான் நிலைநிறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது தெற்கு திபெத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்க மாற்றமாகும் பொதுவாக இந்த விமானங்கள் கிழக்கு பகுதியில் ஜப்பான் அமெரிக்கா தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராகவும்,தென் கிழக்கில் தைவான் மற்றும் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் நிறுத்தி வந்த நிலையில் தற்போது சீனா இந்திய எல்லைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர முடியும் இது நிச்சயமாக இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கை தான்.

மேலும் இந்திய ரஃபேல்களின் வருகை சீன எல்லையோரம் இந்தியாவுக்கு வலுசேர்த்த நிலையில் அதை முற்றிலுமாக மங்கி போக செய்யும் நடவடிக்கையாக இதை பார்க்க வேண்டும் காரணம் அது தான் உண்மையும் கூட மேற்குறிப்பிட்ட விமானங்கள் சீனா தனது வரலாற்றில் தயாரித்ததிலேயே நவீனமானவை ஆகும் மேலும் உலகின் முன்னணி ஐந்தாம் தலைமுறை விமானங்களில் ஒன்றாகும்.

இது நிச்சயமாக நமக்கு கவலையளிக்கும் விஷயமாகும், இந்திய விமானப்படை தற்போது இதை பற்றிய அறிக்கை எதனையும் வெளியிடவில்லை, இதற்கு முன்னர் ஷின்ஜியான் பகுதியில் 2023ஆம் ஆண்டில் இந்த விமானங்கள் தென்பட்டன அங்கிருந்து இந்தியா உடனான வான்வழி தொலைவு ஏறத்தாழ 2000 கிலோமீட்டர் ஆகும் ஆனால் இந்த முறை தான் இந்திய எல்லைக்கு இத்தனை நெருக்கமாக இவை நிறுத்தப்படுகின்றன அது போல இந்த முறை தான் மிக அதிக அளவில் இந்த விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக சீனா திபெத்தில் தனது விமானப்படையின் வலிமையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் பல புதிய விமானப்படை தளங்கள் கட்டப்பட்டு உள்ளன மேலும் பழைய விமானப்படை தளங்கள் மேம்படுத்தப்பட்டும் நவீனமயமாக்கப்பட்டும் வருகின்றன, அதோடு நிற்காமல் மேற்குறிப்பிட்ட J20 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட H-6 தொலைதூர குண்டுவீச்சு விமானங்களையும் நிரந்தரமாக இல்லாவிட்டாலும் தற்காலிகமாக அவ்வப்போது அங்கு நிறுத்தப்படுகின்றன.

அதே போல் பாகிஸ்தான் துருக்கியின் KAAN ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானம் மற்றும் சீனாவின் J31 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்குதவற்கு ஆர்வம் காட்டி அதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது,ஆகவே இத்தகைய நிகழ்வுகளை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு இந்தியாவின் சுதேசி ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமான திட்டமான AMCA வை விரைவுபடுத்த வேண்டும் மேலும் முடிந்தால் ரஷ்யாவுடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டு Su57 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் அல்லது அமெரிக்காவின் F35 விமானங்களை கடற்படை மற்றும் விமானப்படைக்கு வாங்க முயற்சிக்க வேண்டும்.