இந்தியாவிடம் இருந்து இரவில் பார்க்கும் கருவிகளை வாங்கிய பிரேசில் !!

சில வருடங்களுக்கு முன்னர் பிரேசில் ராணுவத்திற்காக இந்தியாவிடம் இருந்து இரவில் பார்க்கும் கருவிகள் வாங்கப்பட்டதாக ஒரு ஆவணம் கசிந்தது. இதைத்தொடர்ந்து பிரேசில் அரசு அதாவது பிரேசில் பாதுகாப்பு அமைச்சகம் இந்த செய்திகளை உறுதிப்படுத்தி உள்ளது. இந்தியாவின் பெல் நிறுவனம் தயாரிக்கும் இரவில் பார்க்கும் கருவிகள் பிரேசில் ராணுவத்திற்காக வாங்கப்பட்டதாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சகம் பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ தளவாட ஏற்றுமதிக்கு மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

அதாவது இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பெல் BEL Bharat Electronics Limited எனப்படும் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்த GPNVG – Ground Panaromic Night Vision Goggles அதாவது பரவலான பகுதிகளை இரவில் பார்க்க உதவும் கருவிகளை தான் பிரேசில் ராணுவம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் பிரேசில் வாங்கிய இந்திய இரவில் பார்க்கும் கருவிகள் எந்த வகையானவை அதாவது எந்த மாடல் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

அதேபோல் தற்போது வரை 22 இரவில் பார்க்கும் கருவிகள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் பிரேசில் ராணுவத்திற்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கருவியின் விலையும் தலா 27 ஆயிரம் டாலர்கள் என்பதும் தெரியவந்துள்ளது ஆனால் இந்த ஒட்டுமொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 4.6 கோடி இந்திய ரூபாய் எனவும் இந்த ஒட்டுமொத்த மதிப்பிற்கான இரவில் பார்க்கும் கருவிகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றனவா அல்லது இனி தான் சப்ளை செய்யப்படுமா என்பது பற்றிய தகவல்களும் ஒப்பந்தத்தை மற்ற விவரங்களும் இந்திய அரசாலோ அல்லது பிரேசில் அரசாலோ பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பது கூடுதல் தகவலாகும்.

எது எப்படியோ இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிரேசில் இடையேயான பாதுகாப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றால் மிகையல்ல. மேலும் எதிர்காலத்தில் மிகவும் அதிநவீன ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் இந்தியா மற்றும் பிரேசில் இடையேயான வர்த்தகம் அதிகரிக்கலாம் அதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் எனவும் அப்படி நடக்கும் பட்சத்தில் அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் எனவும் இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இரவில் பார்க்கும் கருவிகள் மிக மிக நவீனமானவை ஆகும். ஆகவே அவை பிரேசில் ராணுவத்தின் இரவில் இயங்கும் திறன்களை பல மடங்கு அதிகரிக்கும் என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.