கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று இந்திய வங்கதே எல்லையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது மட்டுமின்றி அவரை எல்லைக்கு அப்பால் இழுத்து செல்லவும் முயற்சி நடைபெற்றுள்ளது மேலும் அவரது ஆயுதம் மற்றும் வயர்லெஸ் ரேடியோவை கடத்தல்காரர்கள் பறித்து சென்றுள்ளனர்.
அதாவது எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் போலே மதியம் 1.30 மணியளவில் வங்கதேச கடத்தல்காரர்கள் குழு எல்லையை கடந்து வருவதை பார்த்துள்ளார் கடந்து வந்து கூடி நின்றுள்ளனர் இதனை கண்ட கான்ஸ்டபிள் போலே அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்துள்ளார் இதனை தொடர்ந்து அந்த கும்பல் அவரை அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியும் அவரை நோக்கி ஆபாசமான செய்கைகளை காட்டி உள்ளனர்.
தீடிரென அவரை இரும்பு கம்பிகள் மற்றும் மூங்கில் கம்புகளை கொண்டு தாக்கி உள்ளனர் பின்னர் அவரது துப்பாக்கி மற்றும் வயர்லெஸ் ரேடியோவை பறித்து விட்டு வங்கதேச எல்லைக்குள் இழுத்து செல்ல முயன்றுள்ளனர் எப்படியோ போராடி கான்ஸ்டபிள் போலே அவர்களிடம் இருந்து தப்பி உள்ளார் ஆனால் அவருக்கு பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வங்கதேச எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் கமாண்டன்ட் அதாவது கட்டளை அதிகாரிகள் அந்தஸ்திலான கொடி சந்திப்பு நடத்தி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர் தொடர்ந்து வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் திருடப்பட்ட துப்பாக்கி மற்றும் வயர்லெஸ் ரேடியோவை திரும்ப அளித்தனர், மேற்குறிப்பிட்ட கும்பல் சர்க்கரை கடத்தல் கும்பல் என தெரிய வந்துள்ளது.