அதானி குழுமத்தின் ஒரு பிரிவான ADANI DEFENCE SYSTEMS & TECHNOLOGIES LIMITED ADSTL அதாவது அதானி பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பங்கள் லிமிடெட் இந்தியாவில் ரஷ்ய தயாரிப்பு Igla-S VSHORAD Very Short Range Air Defence Missile குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் பாகங்களை ஒருங்கிணைக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவின் தேசிய அரசு பாதுகாப்பு துறை நிறுவனமான ROSBORONEXPORT ரோஸ்போரான்எக்ஸ்போர்ட மற்றும் இந்தியாவின் அதானி.பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் நிறுவனம் இடையே Igla-S வான் பாதுகாப்பு அமைப்புகளின் பாகங்களை இந்தியாவிற்கு ரஷ்யா அனுப்பி அதானி நிறுவனம் ஒருங்கிணைத்து இந்திய படைகளுக்கு வழங்குவதற்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் Technology Transfer அடிப்படையில் இந்த பணிகள் துவங்கி உள்ளன இது இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அதே போல் இந்திய தரைப்படையும் அதானி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ADANI DEFENCE SYSTEMS & TECHNOLOGIES LIMITED ADSTL நிறுவனத்துடன் 100 இக்லா ஏவுகணைகள், 48 ஏவு கருவிகள், இரவில் பார்க்கும் கருவிகள் மற்றும் சோதனை மையம் ஆகியவற்றை தயாரித்து தர 260 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்தது அதற்கான பணிகள் தான் தற்போது துவங்கி உள்ளன இவற்றின் டெலிவரி இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் முன்னர் இந்திய தரைப்படை ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக இறக்குமதி செய்த 120 ஏவு கருவிகள் மற்றும் 400 ஏவுகணைகளுக்கான ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும், அவை இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்திய தரைப்படைக்கு டெலிவரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது, இந்த இக்லா-எஸ் IGLA-S வான் பாதுகாப்பு அமைப்புகள் வீரர்களே சுமந்து சென்று பயன்படுத்தும் வகையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புகளால் இந்திய தரைப்படையின் குறுகிய தூர வான் பாதுகாப்பு திறன்கள் வலுவடையும், குறிப்பாக அதிக உயர பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் இவை வரப்பிரசாதமாக அமையும் இவற்றை கொண்டு தாழ்வாக பறக்கும் போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகள் போன்றவற்றை தாக்கி அழிக்க முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.