இந்தியா மீதான கட்டுபாடுகளை நீக்கிய ஜெர்மனி இனி ஜெர்மன் துப்பாக்கிகளை இந்திய படைகள் வாங்க முடியும் !!

  • Tamil Defense
  • April 29, 2024
  • Comments Off on இந்தியா மீதான கட்டுபாடுகளை நீக்கிய ஜெர்மனி இனி ஜெர்மன் துப்பாக்கிகளை இந்திய படைகள் வாங்க முடியும் !!

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஜெர்மனியை ஆட்சி செய்த ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயக கட்சி காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்திய படைகள் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறி துப்பாக்கிகள் போன்ற சிறிய ரக ஆயுதங்களை இந்திய படைகளுக்கு விற்பனை செய்ய ஜெர்மானிய நிறுவனங்களுக்கு தடை விதித்தது, இதனால் பல நீண்ட ஆண்டுகளாக இந்திய படைகளால் ஜெர்மானிய ஆயுதங்களை வாங்க முடியவில்லை. இந்தியாவின் முப்படைகள், துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகள் இந்த தடை பட்டியலில் அடங்கின.

ஆனால் தற்போதைய ஜெர்மன் அதிபர் ஒலாஃப் ஷ்கோல்ஸ் தலைமையிலான புதிய ஷோலிச ஜனநாயக அரசு இந்த தடை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி உள்ளது, அதாவது கடந்த ஏப்ரல் 1 முதல் இந்திய படைகளுக்கு விற்பனை செய்ய ஜெர்மனியின் Heckler & Koch நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தது. தொடர்ந்து முதலாவதாக இந்தியாவின் NSG தேசிய பாதுகாப்பு படை தனது MP5 ரக துப்பாக்கிகளுக்கான உதிரி பாகங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு படை சில MP5 துப்பாக்கிகளை அதாவது தடைக்கு பிறகு ஆனால் இந்திய ராணுவம் துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகளால் வாங்க முடியவில்லை, தற்போது இதற்கு ஜெர்மன் தூதரக அதிகாரி அளித்த விளக்கத்தில் மனித உரிமை மீறல்கள் என்பது போன்ற காரணங்கள் சுட்டி காட்டப்பட்டன ஆனால் உண்மை என்னவென்றால் நேட்டோ உறுப்பு நாடுகள் தவிர மற்ற நாடுகளுக்கு ஜெர்மன் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுபாடுகள் உள்ளன ஆகவே தான் இந்தியாவும் இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டது என்றார்.

ஏற்கனவே இந்திய கடற்படையின் மார்க்கோஸ் சிறப்பு படை, NSG தேசிய பாதுகாப்பு படை ஆகியவை ஜெர்மன் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றன தற்போது இந்த தடை பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் ஜெர்மன் அரசின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிக்கிறது என்றால் மிகையாகாது.

உலகம் முழுவதும் ஜெர்மனியின் H & K நிறுவன துப்பாக்கிகளுக்கே மிகப்பெரிய மவுசு உண்டு இந்தியாவிலும் குறிப்பாக 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு அதாவது தேசிய பாதுகாப்பு படை அந்த நிறுவனத்தின் MP5 துப்பாக்கிகளை வைத்து சண்டையிட்டதை கண்ட மாநில காவல்துறைகள் தொடர்ந்து அவற்றை வாங்க விரும்பியதும் இன்றைய பிரதமர் மோடி அன்றைய குஜராத் முதல்வராக இருந்த போது குஜராத் காவல்துறைக்கு இந்த துப்பாக்கிகள் வாங்க முடியாததை பற்றி பிரச்சினை எழுப்பியதும் கூடுதல் தகவல்களாகும்.