உலகின் மிகப்பெரிய விமானப்படையான அமெரிக்காவை பின்தள்ளும் சீனா ??

  • Tamil Defense
  • April 3, 2024
  • Comments Off on உலகின் மிகப்பெரிய விமானப்படையான அமெரிக்காவை பின்தள்ளும் சீனா ??

சமீபத்தில் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏற்கனவே சீன கடற்படை அதிக கப்பல்கள் மற்றும் கலன்களை கொண்டுள்ளதால் அமெரிக்காவை பின்தள்ளி உலகின் மிகப்பெரிய கடற்படையாக உருமாற்றம் அடைந்த நிலையில் தற்போது அமெரிக்க விமானப்படையை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய விமானப்படையாக உருவெடுக்க உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் தளபதியான அட்மிரல் ஜாண் சி அக்கிலினோ கடந்த மார்ச் 21ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் பாராளுமன்ற கமிட்டியின் முன்பு ஆஜராகி மேற்குறிப்பிட்ட தகவல்களை முன்வைத்துள்ளார், இது சீனாவின் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை பிரதிபலிக்கிறது என்றால் மிகையாகாது.

மேலும் அவர் இந்த மாற்றம் ஏற்படுத்த போகும் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல இது முதலாவது இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தையும் பின்னர் உலகளாவிய ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சீனாவின் இந்த வளர்ச்சியை குறைத்து மதிப்பிட கூடாது எனவும் ஆனால் இது விரைவாக அல்லது உடனடியாக நடைபெறாது அதற்கு மேலும் சில காலம் ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தற்போது விமானப்படையில் மட்டுமே 4000 போர் விமானங்களை வைத்துள்ளது இது தவிர அமெரிக்க கடற்படை மரைன்படை தரைப்படை ஆகியவற்றில் உள்ள விமானங்கள் தனி அதே நேரத்தில் கடந்தாண்டு நிலவரப்படி சீன கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து வகையான விமானங்களின் கூட்டு எண்ணிக்கை 3150 ஆகும் என்றார்.

சீனாவின் வளரும் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை விட பெரியது அதேபோல் அமெரிக்கா விமானங்களை பராமரிப்பது உலகளாவிய பொறுப்புக்கள் காரணமாக புதிய விமானங்களை சேர்ப்பதில் தடுமாறுகிறது ஆனால் சீனாவுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல எனினும் சீனாவின் விமானங்கள் தரத்தில் பின்னால் தான் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ சீனாவின் ராணுவ வளர்ச்சி தரம் போன்றவற்றை சேர்த்து கணக்கிட்டாலும் கூட அதை குறைத்து மதிப்பிடும் அளவுக்கு சிறிய பிரச்சினை அல்ல மாறாக இந்தியா வியட்நாம் ஜப்பான் ஃபிலிப்பைன்ஸ் ஆஸ்திரேலியா தென்கொரியா இந்தோனேசியா மங்கோலியா போன்ற இந்தோ பசிஃபிக் நாடுகளுக்கு ஒரு சவால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.