அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றிய சீனா – தீவிரமாகும் பிரச்சனை

  • Tamil Defense
  • April 1, 2024
  • Comments Off on அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றிய சீனா – தீவிரமாகும் பிரச்சனை

இந்தியா சீனா இடையே ஏற்கனவே உள்ள பிரச்சனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது அருணாச்சல பிரதேசத்தின் பெயரை சீனா மாற்றி வரைபடம் வெளியிட்டுள்ளது.திபத்தின் ஒரு பகுதி தான் அருணாச்சல பிரதேசம் என ஏற்கனவே சீனா கூறி வரும் நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தின் பெயரையும் சீனா மாற்றி வெளியிட்டுள்ளது.

” ஷாங்கான்” என அருணாச்சலை பெயர் மாற்றம் செய்துள்ளதை அடுத்து எல்லைப் பகுதியில் உள்ள 30 இடங்களின் பெயரையும் மாற்றி வெளியிட்டுள்ளது.ஆனால் இந்தியா தொடர்ந்து சீனாவின் இந்த செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

இதே போல் 2021 டிசம்பரிலும் 15 இடங்களுக்கு சீனா பெயர் மாற்றம் செய்தது.இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக எதிர்த்தது.

இடங்கள் தவிர்த்து காடுகள், மலைகள் மற்றும் ஆறுகளின் பெயர்களையும் சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது.எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே இரு நாடுகளும் மோதல் போக்கில் இருப்பதை அடுத்த தற்போது இந்தச் செயலை சீனா மேற்கொண்டுள்ளது.