கூடங்குளம் அணு உலை அருகே ஏலியன்கள் தென்பட்டதாக தமிழக காவல் இணை ஆய்வாளர் தகவல் !!
1 min read

கூடங்குளம் அணு உலை அருகே ஏலியன்கள் தென்பட்டதாக தமிழக காவல் இணை ஆய்வாளர் தகவல் !!

கடந்த 2020ஆம் ஆண்டு கூடங்குளம் பகுதியில் ஏலியன்களின் UFO – Unidentified Flying Objects எனப்படும் வானூர்திகள் தென்பட்டதாக அங்கு பணியாற்றிய காவல் இணை ஆய்வாளர் சயத் அப்துல் காதர் பார்த்தாகவும் அவற்றின் இரண்டு வீடியோக்களை அவர் பதிவு செய்ததாகவும்தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் இதுபற்றி ஊடகங்களிடம் பேசும் போது அந்த வானூர்திகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அசைவின்றி நின்றதாகவும் தீடிரென அதிவேகமாக ZigZag அதாவது கோணல் மாணலாக பறந்ததாகவும் பின்னர் பட்டென மறைந்ததாகவும்

இதை பற்றி சென்னையை சேர்ந்த UFO ஆய்வாளர் ஹூசைனுடன் பேசிய போது அதை உறுதி செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார், இதுபற்றி ஹூசைன் பேசும்போது கடந்த ஆண்டு கூடங்குளம் பகுதியில் ஒரு பொறியியல் பட்டதாரி ஆகஸ்ட் மாதம் 10 முறை UFO க்களை பார்த்தாக கூறினார்.

மேலும் காவல் இணை ஆய்வாளர் UFO க்களை பார்த்ததாக சொல்லப்படும் நாளிலிருந்து 10 நாட்கள் முன்னர் ஒய்வு பெற்ற டிஜிபி பிரதீப் ஃபிலிப் சென்னை நீலாங்கரை மற்றும் மஹாபலிபுரம் இடையே UFO க்களை பார்த்தாகவும்

பொதுவாக உலகம் முழுவதும் பெரும்பாலும் அணுசக்தி அல்லது அணு ஆயுத மையங்கள் அருகே தான் இவை தென்படுவதாகவும் அந்த வகையில் பார்த்தால் கூடங்குளம் மற்றும் சென்னை கல்பாக்கம் பகுதிகளில் அணு உலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது எனவும்

கடந்த 1964ஆம் ஆண்டு அமெரிக்காவில் டம்மி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற ஏவுகணையை ஒரு UFO சுட்டு வீழ்த்திய சம்பவம் சமீபத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரியால் விளக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எது எப்படியோ தற்போது வரை காவல் இணை ஆய்வாளர் சயத் அப்துல் காதரின் கூற்றுக்கு தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ இதுவரை எந்தவித விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.