முதல் தேஜஸ் விபத்து 23 ஆண்டுகால விபத்தில்லாத வரலாறு உடைந்தது !!

  • Tamil Defense
  • March 13, 2024
  • Comments Off on முதல் தேஜஸ் விபத்து 23 ஆண்டுகால விபத்தில்லாத வரலாறு உடைந்தது !!

நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் விமானப்படை தளம் அருகே வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் இலகுரக தேஜஸ் போர் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது இது முதலாவது தேஜஸ் விபத்தாகும்.

1980களில் தேஜஸ் திட்டம் தொடங்கப்பட்டு 1990களின் இறுதியில் தயாரிப்பு நிலையை அடைந்து 2001ல் முதலாவது வெற்றிகரமாக பறந்தது தேஜஸ் அன்று முதல் இன்று வரை 23 ஆண்டுகள் விபத்தின்றி பறந்தது மட்டுமின்றி இந்திய விமானப்படையில் இரண்டு படையணிகள் அளவில் அதாவது 50 தேஜஸ் போர் விமானங்கள் சேவையில் உள்ளன மேலும் தற்போது அர்ஜென்டினா ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட தகவல்கள் விமானத்தின் என்ஜின் தனது சக்தியை இழந்ததாகவும் விமானி முயன்றும் விமானத்தை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலையில் விமானி விமானத்தை விட்டு வெளியேறி பாராசூட் மூலமாக தப்பித்த நிலையில் விமானம் விபத்தை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் Court of Inquiry எனப்படும் விமானப்படையின் துறை ரீதியான விசாரணையின் பிறகே விபத்தின் உண்மையான காரணம் வெளிவரும் அதே நேரத்தில் தேஜஸ் விமானம் அமெரிக்காவின் General Electrics நிறுவனத்தின் GE F404 IN20 ரக மேம்படுத்தப்பட்ட அதிநவீன என்ஜின்களை பயன்படுத்தி வருவதும் இதே என்ஜின்கள் தான் F-117, F/A-18 உள்ளிட்ட அமெரிக்க போர் விமானங்களிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும் No 18 Squadron (Flying Bullets) 18ஆவது படையணியை சேர்ந்ததாகும், இதனுடைய வரிசை எண் (serial number) LA-2050 இது சமீபத்தில் நடைபெற்ற பாரத் ஷக்தி போர் பயிற்சியில் பங்கு பெற்றதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.