பொருளாதார தடைகளுக்கு இடையே ஐரோப்பிய தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்த ரஷ்யா !!

  • Tamil Defense
  • March 25, 2024
  • Comments Off on பொருளாதார தடைகளுக்கு இடையே ஐரோப்பிய தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்த ரஷ்யா !!

ரஷ்யா 2023ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 100 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அதிநவீன தொழில்நுட்பங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக புகழ்பெற்ற Bloomberg ப்ளூம்பெர்க் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பாக கால்பங்கு அளவிலான தொழில்நுட்பங்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாகவும் மீதமுள்ளவை துருக்கி, அர்மீனியா, ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா, சீனா, உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.

ஒரு மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி பேசும்போது இதுவரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தகைய இறக்குமதிகளை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் இறக்குமதி செய்யப்பட்ட பல தொழில்நுட்பங்கள் உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவுக்கு நேரடியாகவும், வேறு நாடுகள் வழியாகவும் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளை முடக்ங நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.