வங்கதேச கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள் கண்காணிக்கும் இந்திய கடற்படை !!

  • Tamil Defense
  • March 28, 2024
  • Comments Off on வங்கதேச கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள் கண்காணிக்கும் இந்திய கடற்படை !!

கடந்த மார்ச் 12ஆம் தேதி மொஸாம்பிக் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி சென்று கொண்டிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த KRSM குழுமத்தின் ஒரு பிரிவான SR SHIPPING நிறுவனத்திற்கு சொந்தமான MV Abdullah அப்துல்லா என்கிற சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர்.

இந்த கப்பலில் வங்கதேசத்தை சேர்ந்த 23 குழுவினரும் பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் மேலும் கப்பலில் 55,000 டன்கள் நிலக்கரி உள்ளதாக கூறப்படுகிறது இந்த கப்பலை சோமாலியாவுக்கு கடத்தி செல்லும் வழியில் மார்ச் 14ஆம் தேதி இந்திய கடற்படை இடைமறித்தது தொடர்ந்து குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்த இந்திய கடற்படை தொடர்ந்து கப்பலை சோமாலிய கடற்பகுதி வரை பின்சென்றது.

தற்போது சோமாலியாவின் நுகல் பகுதியில் உள்ள ஜிஃப்பல் கடற்கரை பகுதியில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மேலும் வங்கதேச அரசு மற்றும் கப்பல் நிறுவனத்திடம் சமீபத்தில் ஒரு ஆபரேஷன் நடத்தி ஒரு கப்பலை மீட்டது போல ஆபரேஷன் நடத்த தயார் எனவும் அனுமதி தந்தால் நடவடிக்கை துவங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் கப்பல் நிறுவனம் கப்பல் குழுவினரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி தயங்குவதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் நுகல் பகுதிக்கு பொறுப்பான சோமாலிய காவல் ஆணையர் கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் சரணடையுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மறுத்தால் சமீபத்தில் கடற்கொள்ளையர்கள் கைது செய்யபட்டது போன்ற சம்பவம் ஏறபடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கப்பலை விடுவிக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதில் இணைந்து சோமாலிய காவல்துறையும் உதவ தயார் எனவும் கப்பல் குழுவினர் குடும்பத்தினருடன் பேசவும் கப்பலை பராமரிக்கவும் கப்பலிலேயே தங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்,

தற்போது சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பணயத்தொகையாக தந்தால் தான் கப்பல் குழுவினரை விடுவிப்போம் என கோரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.