இந்திய கடற்படை ஆபரேஷன் சங்கல்ப் என்ற பெயரில் செங்கல் பகுதியில் ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உள்ளது.
இந்த நடவடிக்கைள் தற்போது 100ஆவது நாளை எட்டி உள்ளன, இதுவரை சுமார் 1000 முறை கப்பல்களில் ஏறி சோதனை, மருத்துவ உதவி, தீயணைப்பு, மீட்பு, தாக்குதல் முறியடிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் 100 உயிர்களை காப்பாற்றி உள்ளதாகவும்
18 சம்பவங்களில் முதல் ஆளாக இந்திய கடற்படை உதவி அளித்ததாகவும், 15 லட்சம் டன்கள் மதிப்பிலான உரம் எண்ணெய் கனிமங்கள் உள்ளிட்ட சரக்குகளை பாதுகாத்துள்ளதாகவும், 450 கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளதாகவும், 3500 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும்
இந்த நடவடிக்கைக்காக 21 போர் கப்பல்கள், 50 விமானங்கள், 5000 அதிகாரிகள், இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளதாகவும், சுமார் 450 கப்பல் நாட்கள் மற்றும் 900 மணி நேர பறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
செங்கடலில் ஏடன் வளைகுடா, அரபிக்கடல், ஆஃப்ரிக்க முனை என மூன்று பகுதிகளாக பிரித்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் இதுபற்றி சமீபத்தில் கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஊடகங்களை சந்தித்து பேசினார்.
அப்போது இந்திய பெருங்கடல் பகுதி நமது நாட்டின் பெயரை தாங்கி உள்ளது இந்த பகுதியை நாம் பாதுகாக்காவிட்டால் வேறு யார் பாதுகாப்பது ?? இந்த பிராந்தியத்தில் நாம் தான் மிகப்பெரிய கடற்படை சக்தி தொடர்ந்து இந்திய கடற்படை தெளிவாக தனது பணிகளை மேற்கொள்ளும்
முன்னதாக ஒரு நாளைக்கு 54-55 கடற்கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன தற்போது அது 64-65 ஆக அதகரித்துள்ளது, இங்கு அமெரிக்கா தலைமையிலான CMF – Combined Maritime Forces, ஐரோப்பிய ஒன்றியத்தின் EUNAVFOR – European Union Naval Forces, இங்கிலாந்தின் UKMTO – United Kingdom Maritime Trade Operations, சீனாவின் Anti Piracy Escort f
Force ஆகியவை தங்களது நாடுகளின் கோட்பாடுகளின் படி செயல்பட்டு வருவதாகவும் இந்திய கடற்படையும் அவர்களுடன் தேவைப்படும் போது இணைந்து செயல்படுவதாகவும் கூறினார்.
மேலும் மிகப்பெரிய சக்தியுடன் மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாகவும் தற்போது இந்திய கடற்படையின் தொடர் மற்றும் பல்வேறு வகையான நடவடிக்கைகள் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் தவிர்க்க முடியாத இடத்தை சுட்டு காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் உலக அளவில் பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.