இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் !!

  • Tamil Defense
  • March 24, 2024
  • Comments Off on இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் !!

வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கோர பயங்கரவாத தாக்குலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர் இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தொடர்ந்து பல உலக நாடுகள் கண்டனங்களையும் வருத்தங்களையும் இரங்கலையும் பதிவு செய்துள்ளன.

இந்தியா:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த தாக்குதலை வன்மையாக இந்தியா கண்டிக்கிறது, இந்தியா இந்த நேரத்தில் ரஷ்ய அரசு மற்றும் மக்களுடன் நிற்கிறது எங்கள் சிந்தைகளும் பிரார்த்தனைகளும் மரணமடைந்தோரின் குடும்பங்களுடன் உள்ளது என கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இந்த கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறோம் எனவும், திட்டமிட்டோர், செயல்படுத்தியோர், நிதி அளித்தோர் என இதற்கு பொறுப்பான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும்

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டானியோ குவட்டரேஸ் கூறும்போது ஐஸ் இயக்கத்தை ஒழிக்க உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும் அதனை முழு பலத்துடன் உறுதியுடன் எதிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

நேட்டோ:
நேட்டோ செய்தி தொடர்பாளர் ஃபாரா டக்லாலா கூறும்போது மாஸ்கோ தாக்குதலை கண்டிக்கிறோம் இந்த கோர தாக்குதலை யாரும் நியாயப்படுத்த முடியாது, மரணமடைந்தோரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்து இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

சீனா:
சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறும்போது இந்த தாக்குதலை வண்மையாக கண்டிப்பதாகவும், அனைத்து விதமான பயங்கரவாத தாக்குதலைகளையும் சீனா எதிர்ப்பதாகவும், ரஷ்ய அரசுடன் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் தோளோடு தோள் நிற்பதாகவும் கூறியுள்ளார்.

துருக்கி:
துருக்கி இந்த கோர தாக்குதலை கண்டித்து வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகைய தாக்குதல்கள் எந்த உருவில் எங்கிருந்து யார் மூலமாக வந்தாலும் அதை ஏற்க முடியாது மனித குலத்தின் பொதுவான எதிரியான பயங்கரவாதத்தை துருக்கி தொடர்ந்து எதிர்க்கும் என கூறியுள்ளது.

அமெரிக்கா:
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜாண் கிர்பி பேசும்போது தாக்குதல் பற்றிய செய்திகள் படங்கள் மனதை உலுக்குகின்றன, பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அமெரிக்க வெளியுறவு செயலர் பயங்கரவாதத்தை முற்றிலும் எதிர்ப்பதாக கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்:
ஐரோப்பிய ஒன்றிய செய்தி தொடர்பாளர் ஐரோப்பிய ஒன்றியம் இந்த தாக்குதல்களை கண்டிப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் இந்த தாக்குதல்களை கடுமையாக கண்டித்து பேசியுள்ளார்.

இங்கிலாந்து:
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் இந்த தாக்குதலை கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஃபிரான்ஸ் கியூபா இத்தாலி இஸ்ரேல் ஆஃப்கானிஸ்தான் ஜெர்மனி ஜப்பான் வெனிசுலா பாலஸ்தீனம் மலேசியா ஸ்பெயின் சிரியா நார்வே சுவீடன் டென்மார்க்

போலந்து ஐக்கிய அரபு அமீரகம் சவுதி அரேபியா எகிப்து கீரிஸ் தென் ஆப்பிரிக்கா ஐஸ்லாந்து பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் தங்களது கண்டனம் மற்றும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.