கொச்சியில் சேவையை துவங்கிய இந்திய கடற்படையின் முதல் MH-60R ஹெலிகாப்டர் படையணி !!

இந்திய கடற்படைக்கு அமெரிக்காவில் இருந்து உலகின் அதிநவீன கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கி வேட்டை ஹெலிகாப்டரான MH-60 ROMEO ஹெலிகாப்டர்களில் 24கினை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த வகையில் அவற்றில் முதல் ஆறு ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு அமெரிக்காவில் விமானிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட இதர குழுவினருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு கடந்த 6ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு இந்திய கடற்படையின் சேவையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.

இவை INAS Indian Naval Air Squadron 344 அதாவது இந்திய கடற்படையின் 344ஆவது வான் படையணியின் அங்கமாக இருக்கும் இந்த படையணியின் கட்டளை அதிகாரியாக கேப்டன் அபிஷேக் ராம் பணியாற்றுவார், இந்த படையணி நீர்மூழ்கி மற்றும் கப்பல் எதிர்ப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, மருத்துவ அவசரங்கள், சப்ளை ஆகிய பணிகளில் ஈடுபடும்.

கொச்சியில் உள்ள INS GARUDA எனப்படும் இந்திய கடற்படையின் விமான தளத்தில் இருந்து இந்த INAS 344 MH-60 ROMEO நீர்மூழ்கி மற்றும் கப்பல் எதிர்ப்பு ஹெலிகாப்டர் படையணி இயங்கும்,

மேலும் இந்த தளத்தில் INAS 550 டோர்னியர் Dornier-228 கண்காணிப்பு படையணி, INAS-336 Seaking MK42B நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டர் படையணி, INAS 321 HAL CHETAK தேடுதல் மற்றும் மீட்பு படையணி, INAS 342 IAI HERON , IAI SEARCHER டிரோன் படையணி ஆகியவை இயங்குவது குறிப்பிடத்தக்கது.