மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பியுள்ள இந்திய கடற்படை !!

இந்திய கடற்படை தனது மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் அதாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இரண்டாவது விமானந்தாங்கி கப்பலுக்கான முன்மொழிவை மத்திய அரசிடம் சமர்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு வலிமையான பாதுகாப்பு நிலையை அடைவதற்கு இந்த மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் மிகவும் இன்றியமையாதது என இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஏற்கனவே INS VIKRANT விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டது இந்த இரண்டாவது உள்நாட்டு விமானந்தாங்கி கப்மலுக்கான ஆதரவை
பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் அடிப்படையில் விக்ராந்த் போல இருக்கும் எனவும் அதே நேரத்தில் பெரிய போர் விமானங்கள் மற்றும் அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ட்ரோன்கள் ஆகியவற்றை கையாளும் திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே கட்டுவது உள்நாட்டு பொருளாதாரத்திற்கு உதவும் அதே நேரத்தில் இந்தியாவின் விமானந்தாங்கி கப்பல் கட்டுமான திறன்களுக்கு ஒரு பெரும் எடுத்துக்காட்டாக அமையும் என்றால் அது மிகையாகாது.

தற்போது இந்திய கடற்படை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது எது எப்படியோ இனி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தான் அரசு தரப்பில் இருந்து இதற்கான பதில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.