84 ATAGS பிரங்கிகளை வாங்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த அர்மீனியா !!
அஸர்பெய்ஜான் நாட்டுடன் கடந்த சில வருடங்களாக தீவிரமான எல்லை பிரச்சினை மற்றும் போரில் அர்மீனியா ஈடுபட்டுள்ளது அதை தொடர்ந்து இந்தியாவுடன் பல ஒப்பந்தங்கள் மூலமாக ஆயுதங்களை வாங்கி வருகிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு முதல்கட்டமாக ஆறு ATAGS பிரங்கிகளை அர்மீனியா வாங்கிய நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மீண்டும் சுமார் 84 ATAGS பிரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் மூன்று ஆண்டுகளில் டெலிவரி முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக அர்மீனிய தரைப்படையில் இந்திய ATAGS பிரங்கிகளின் எண்ணிக்கை சுமார் 90 ஆக மாறும், மேலும் ஏற்கனவே அர்மீனியா இந்தியாவிடம் இருந்து PINAKA MBRL எனப்படும் பலகுழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
அஸர்பெய்ஜானுடன் ஏற்ப்பட்டுள்ள மோதல் காரணமாக அர்மீனியா தனது ராணுவத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது இதை தொடர்ந்து பிரங்கிகள் ஏவுகணைகள் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை வாங்கி குவித்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுடன் ஏவுகணைகள் ராக்கெட்டுகள் மற்றும் இதர குண்டுகளுக்காக சுமார் 245 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் செய்து கொண்டது மேலும் 2020ஆம் ஆண்டு நான்கு SWATHI WLR ஸ்வாதி எனும் ஆயுதங்களை கண்டுபிடிக்கும் ரேடார்களை வாங்கியது.
அர்மீனியா இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் ஏறுமுகமாகவும் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.