உக்ரைனுக்கு குண்டுகளை வாங்க இந்தியாவுடன் ஜெர்மனி ரகசிய பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • March 22, 2024
  • Comments Off on உக்ரைனுக்கு குண்டுகளை வாங்க இந்தியாவுடன் ஜெர்மனி ரகசிய பேச்சுவார்த்தை !!

ஜெர்மானிய பத்திரிகையான ஸ்பீகல் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் உக்ரைனுக்கு பிரங்கி குண்டுகளை வாங்கி கொடுக்க இந்தியாவுடன் ஜெர்மனி அரசு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்தியா பெரும் அளவில் பிரங்கி குண்டுகளை கையிருப்பு வைத்துள்ளதாகவும் ஆகவே அவற்றை பெற்று உக்ரைனுக்கு உதவ ஜெர்மனி அரசு முயன்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்தியா ரஷ்யாவுடன் நல்ல உறவை பேணி வருவதால் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அதனால் மூன்றாவது நாடு வழியாக அவற்றை வாங்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் பிரங்கி குண்டுகளை அதிக அளவில் கையிருப்பு வைத்துள்ள ஒரு சில ஆஃப்ரிக்க, பால்கன் மற்றும் அரபு நாடுகளுடனும் ஜெர்மனி அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

சமீபத்தில் ஜெர்மனி சுமார் 1.13 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு அறிவித்தது அதில் பல லட்சம் சோவியத் காலகட்ட பிரங்கி குண்டுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.