இந்திய கடலோர காவல்படையின் சிறப்பு மாசு கட்டுபாட்டு கப்பலான ICGS SAMUDRA PAHERDAR சமுத்ரா பஹெர்தார் தற்போது ஆசியான் நாடுகள் குறிப்பாக வியட்நாம் , ப்ரூனய மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பயணம் சென்றுள்ளது.
அந்த வகையில் ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை சென்றடைந்த மேற்குறிப்பிட்ட கப்பலை அப்போது அங்கு சுற்று பயணமாக சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பார்வையிட்டு கப்பல் கலந்துரையாடி அவர்களிடையே பேசினார்.
அப்போது அவர் ஃபிலிப்பைன்ஸில் என்னுடைய பயணமும் இந்த கப்பலின் வருகையும் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை சுட்டி காட்டுவதாகவும் இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் நீண்ட கால தாக்கத்தை உணர முடிவுதாகவும் தொடர்ந்து எங்களது கிழக்கு நோக்கிய பார்வை மற்றும் இந்தோ பசிஃபிக் திட்டங்கள் சமகால மாற்றத்தை அடையும் என்றார்.

மேற்குறிப்பிட்ட கப்பல் ஃபிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையுடன் இணைந்து மாசு கட்டுபாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் எனவும் இந்த கப்பலில் பல அதிநவீன மாசு கட்டுபாட்டு அமைப்புகள் மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர் ஒன்று உள்ளதாகவும் எண்ணெய் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை கையாள இது உதவும் மேலும் கப்பலில் Exchange முறையில் 25 தேசிய மாணவர் படையினரும் சென்றுள்ளனர்.
தொடர்ந்து வியட்நாமின் ஹோ சி மின், ப்ருனயின் முவாரா துறைமுகங்கள் சென்று வியட்நாம் மற்றும் ப்ருனய் கடலோர காவல் படைகளுடனும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்திய கடலோர காவல்படை கப்பல் ஆசியான் ASEAN நாடுகளுக்கு சுற்றுபயணம் செல்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.