மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை தாக்குதல் 130 பேர் மரணம் உலகை உலுக்கிய கோர தாக்குதல் !!
கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள க்ரோக்கஸ் சிட்டி ஹால் எனப்படும் அரங்கில் புகுந்த நான்கு பேர் துப்பாக்கி சூடு நடத்தியும் கையெறி குண்டுகளை வீசியும் சுமார் 130 பேருக்கும் அதிகமானோரை கொன்றனர், 140க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் இதை வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ள மேற்குறிப்பிட்ட வீடியோவின் ஆரம்பத்தில் ஒருவரின் கழுத்தை கொடுரமாக அறுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு படையினரின் OMON சிறப்பு படைகள் அரங்கத்தை சுற்றி வளைத்து உள்நுழைந்ததும் பயங்கரவாதிகள் அரங்கை விட்டு வெளியேறி ஒரு வெள்ளை ரெனால்ட் காரில் தப்பி சென்றனர்.
பின்னர் பயங்கரவாதிகளை ரஷ்ய காவல்துறை, அக்மட் சிறப்பு படைகள் மற்றும் ரஷ்ய தேசிய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது ஒருவன் மட்டும் கொல்லப்பட்ட நிலையில் மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் நிகழ்ந்த க்ரோக்கஸ் சிட்டி ஹால் பயங்கரவாதிகளின் குண்டு வீச்சு தாக்குதலில் தீப்பற்றி எரிந்து சாம்பலாகி முற்றிலும் அழிந்து போயுள்ளதும், ரஷ்ய பாராளுமன்றம் மறுபடியும் மரண தண்டனை சட்டத்தை அமல்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.