உக்ரைனுக்கு 8 லட்சம் பிரங்கி குண்டுகளை வாங்கும் செக் குடியரசு !!
1 min read

உக்ரைனுக்கு 8 லட்சம் பிரங்கி குண்டுகளை வாங்கும் செக் குடியரசு !!

கிழக்கு ஐரோப்பிய நாடான செக் குடியரசின் ஜனாதிபதி பீட்டர் பவேல் சமீபத்தில் உக்ரைனுக்கு உதவும் வகையில் செக் குடியரசு சுமார் 8 லட்சம் பிரங்கி குண்டுகளை திரட்ட உள்ளதாகவும் இதற்கான நிதி திரட்டபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது நார்வே, ஃபிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, லித்துவேனியா, பெல்ஜியம் ஆகியவை இதற்கு நிதி உதவி அளித்துள்ளதாகவும் விரைவில் குண்டுகள் படிப்படியாக உக்ரைனுக்கு அனுப்பப்படும் அப்போது நிதி உதவி அளித்த நாடுகளுக்கு தகவல் அளிக்கப்படும் எனவும் செக் அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் சோவியத் ஒன்றிய காலகட்டத்தை சேர்ந்த சுமார் 5 லட்சம் 155 மில்லிமீட்டர் மற்றும் 3 லட்சம் 122 மில்லிமீட்டர் பிரங்கி குண்டுகளை செக் குடியரசு அதிகாரிகள் வெளிநாடுகளில் கண்டறிந்து உள்ளதாகவும் அவற்றை வாங்கி உக்ரைனுக்கு அளிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.